உஷார்...!!! நீண்ட நேரம் வறுத்த உணவை சாப்பிட்டால் நெருங்குகிறது புற்றுநோய் .......!

 
Published : Jan 25, 2017, 11:31 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
உஷார்...!!! நீண்ட நேரம் வறுத்த உணவை சாப்பிட்டால் நெருங்குகிறது  புற்றுநோய் .......!

சுருக்கம்

நீண்ட நேரம் வறுத்த உணவு சாப்பிட்டால் புற்றுநோய்  வருவதாக ஆய்வில் தகவல்வெளியாகியுள்ளது.

பொன்னிற வறுவல் :

பொன்நிறத்தில் வறுக்கப்படும் உணவு வகைகள் உடல் நலத்துக்கு தீங்கு இழைப்பதில்லை. அதே நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்து சாப்பிடும் உணவால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

நீண்ட நேர வறுவல் :

உருளைக்கிழங்கு மற்றும் வேரில் இருந்து கிடைக்கும் கிழங்கு வகை உணவு பொருட்கள் மற்றும் ரொட்டியை அதிக வெப்பத்தில், நீண்ட நேரம் வறுத்து சாப்பிடுகின்றனர். இவ்வாறு சாப்பிடுவதில் பெரும்பாலானோருக்கு அலாதி பிரியம் உள்ளது. அவ்வாறு சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கானது. அதனால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் :

கருஞ்சிவப்பு நிறத்தில் வறுக்கப்படும் உணவு பொருட்களில் ‘அக்ரிலேமிட்’ எனப்படும் ரசாயன பொருளின் அளவு அதிகரிக்கிறது. இதன்மூலம் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது என அதிர்ச்சி  தகவல் வெளியாகி உள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்