
சர்க்கரை நோயாளிகள் உணவுப் பழக்கவழக்கங்களில் எச்சரிக்கை காட்ட வேண்டும். குறிப்பாக, தினமும் அருந்தும் பானங்கள் உடலின் இரத்த சர்க்கரை மட்டத்தை (Blood Sugar Level) அதிகரிக்கவோ, கட்டுப்படுத்தவோ செய்யக்கூடும். அவற்றில் ஒரு முக்கியமானது பிளாக் காபி (Black Coffee). பலர், "நீரிழிவு உள்ளவர்கள் தினமும் பிளாக் காப்பி குடிக்கலாமா?" என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இதற்கு அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியான பதில்கள் இதோ...
பிளாக் காபியின் மருத்துவப் பயன்கள் :
பிளாக் காபி (Black Coffee) என்பது பாலோ, சர்க்கரையோ சேர்க்காமல் தயாரிக்கும் சுத்தமான காபி. இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
1. இன்சுலின் செருக்கை (Insulin Sensitivity) அதிகரிக்க உதவுகிறது - நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கியமான பிரச்சனை இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance). பிளாக் காபியில் உள்ள பொலிஃபினால்கள் (Polyphenols) மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. சர்க்கரையை கட்டுப்படுத்தி, நீரிழிவை சமநிலைப்படுத்த உதவுகிறது.
2. இரத்த சர்க்கரை உயர்வதை கட்டுப்படுத்தும் - பிளாக் காபியில் உள்ள கிளோரோஜெனிக் அமிலம் (Chlorogenic Acid) இரத்த சர்க்கரை உயர்வதை குறைக்கும். உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை திடீரென அதிகரிக்காமல் இருக்க இது உதவுகிறது.
3. உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது - பிளாக் காபி மெட்டபாலிசத்தை (Metabolism) அதிகரித்து, அதிக கலோரியை எரிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது பயன்படும். ஏனெனில் அதிக உடல் எடை நீரிழிவை மேலும் மோசமாக்கும்.
4. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் - இதய நோய்கள், நீரிழிவுடன் தொடர்புடைய ஒரு பெரிய ஆபத்து. பிளாக் காபி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய்களைத் தடுப்பதற்காக ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிளாக் காபியின் பக்கவிளைவுகள் :
பிளாக் காபி பல நன்மைகளை வழங்கினாலும், மிகுந்த அளவில் குடிப்பதன் மூலம் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
1. அதிகப்படியான காஃபின் – சர்க்கரை நோயாளிகள் அதிகமாக காஃபின் (Caffeine) உட்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். அதிக காஃபின் மனச்சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை (Insomnia) மற்றும் உடல்நிலை மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
2. இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் - சிலருக்கு பிளாக் காபி குடித்தவுடன் இரத்த அழுத்தம் (Blood Pressure) தாறுமாறாக அதிகரிக்கலாம். இது இதய நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே அளவோடு அருந்த வேண்டும்.
3. வயிற்றுப் பிரச்சனைகள் - காஃபின் குடல் இயக்கத்தைக் (Gut Motility) அதிகரித்து, வயிற்று உப்புசம் அல்லது குரோன் நோய் (Crohn’s Disease) உள்ளவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். நாளொன்றுக்கு அதிகப்படியான அளவு (3-4 கப்) குடிக்கக் கூடாது.
சர்க்கரை நோயாளிகள் பிளாக் காபி எப்படி உட்கொள்வது?
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பிளாக் காபியை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் அருந்த சில வழிகள் உள்ளன.
1. சர்க்கரை, பால், தயிர், தேன் – எதையும் சேர்க்க வேண்டாம்
2. உணவுக்குப் பிறகு அல்லது முன்னதாக குடிக்கலாம், ஆனால் குறைவாகவே குடிக்க வேண்டும்
3. ஒரு நாளில் 1-2 கப் மட்டுமே குடிக்க வேண்டும்
4. சிற்றுண்டி இல்லாமல் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம் .இ து அமிலத்தன்மையை (Acidity) அதிகரிக்கும்.
5. நேச்சுரல் காபி தூள் பயன்படுத்த வேண்டும். இனிப்புச் சேர்க்கை உள்ள குடிநீர் அல்லது இன்ஸ்டன்ட் காபி தவிர்க்க வேண்டும்.
பிளாக் காபி – குடிக்கலாமா? வேண்டாமா?
* நன்மை - இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்கும்.
* எச்சரிக்கை - அதிக காஃபின் நரம்பு கோளாறுகளை ஏற்படுத்தலாம். இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்.
* அளவோடு (1-2 கப்) ஒரு நாளைக்கு குடிக்கலாம். ஆனால் சர்க்கரை, பால் சேர்க்கக்கூடாது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.