
Can Banana Peels Really Clean Windows? : பொதுவாக வீட்டை நாம் சுத்தம் செய்யும் போது ஜன்னல்களை சுத்தம் செய்யும் மறந்து விடுகிறோம். இதன் காரணமாக அதில் விடாப்பிடியான கறைகள் படிந்து விடுகின்றன. ஜன்னல் கண்ணாடியில் போடப்பட்டிருந்தால் பிடிவாதமான கறையானது ஜன்னலின் அழகை கெடுக்கும். வீட்டை எவ்வளவு நன்றாக சுத்தமாக வைத்தாலும் ஜன்னல் அழுக்காக இருந்தால் வீடு பார்ப்பதற்கு அழகாக தோன்றாது.
கண்ணாடி ஜன்னலை சுத்தம் செய்வதற்கு என்ன கடைகளில் ஸ்ப்ரேக்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் ரசாயனங்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ரசாயனமில்லாமல் இயற்கை முறையில் உங்கள் வீட்டு கண்ணாடி ஜன்னலை சுத்தம் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், 'வாழைப்பழ தோல்' (Banana peel) உங்களுக்கு உதவும்.
பொதுவாகவே வாழைப்பழத்தை நாம் சாப்பிட்ட பிறகு அதன் தோலை கீழே தூக்கி வீசி விடுவோம். ஆனால் அதன் தோலை அப்படி தூக்கிப் போடாமல் அதை கொண்டு கண்ணாடி ஜன்னல்களை சுத்தம் செய்யலாம் தெரியுமா? ஆம், வாழைப்பழத் தோல் உட்புறத்தில் இருக்கும் இயற்கை எண்ணெய்கள் மற்றும் மென்மையான அமிலங்கள் கண்ணாடி மேற்பரப்புகளில் உள்ள அழுக்கு மற்றும் தூசியை எளிதாக சுத்தம் செய்ய உதவுகின்றன. இது அசாதாரணமாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இந்த எளிய வீட்டுப் பொருள் நம்ப முடியாத அளவிற்கு மிகவும் பயனுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும். இப்போது வாழைப்பழத் தோலை கொண்டு வீட்டின் கண்ணாடி ஜன்னல்களை துடைப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
வாழைப்பழ தோள்களை கொண்டு கண்ணாடி ஜன்னல்களை சுத்தம் செய்யும் முறை:
முதலில் ஒரு புதிய வாழைப்பழத் தோலை எடுத்து அதன் உள்பக்கத்தை நேரடியாக ஜன்னலில் தேய்க்கவும். குறிப்பாக அழுக்கு மற்றும் கறை படிந்த அல்லது எண்ணெய் பசை உள்ள பகுதிகளில் நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணி கொண்டு கண்ணாடியை துடைக்க வேண்டும். இப்போது ஜன்னல் கண்ணாடியை பார்த்தால் அழுக்கு தூசிகள் ஏதுமின்றி, பளபளப்பாகவும், புதியதாகவும் இருக்கும்.
அன்றாட பொருட்களை புத்திசாலித்தனமாகவும், ஆச்சரியமான வழிகளில் பயன்படுத்துவோருக்கு இது ஒரு சிறந்த மாற்றம்.
நினைவில் கொள் :
சிறந்த முடிவுகளுக்கு நேரடி சூரிய ஒளியில் ஒருபோதும் கண்ணாடி ஜன்னல்களை சுத்தம் செய்ய வேண்டாம். ஏனெனில் சூரிய வெப்பம் வாழைப்பழத் தோலில் இயற்கை எண்ணெயை மிகவும் விரைவாக உலர்த்தி விடும். எனவே, குளிர்ச்சியான சமயத்தில் துடைக்கலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.