சொந்த கிராமத்திற்கு பஸ் வசதி பெற்று கொடுத்த மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்..!! குஷியில் மினாட்சிபுரம் கிராமம்.

By Thiraviaraj RMFirst Published Feb 5, 2020, 9:17 AM IST
Highlights

குடியரசு தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் தங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி வேண்டுமென்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை பார்த்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அந்த மாணவி படிக்கும் பள்ளிக்கே சென்று பாராட்டி புத்தகம் ஒன்றை வழங்கினார். இந்த நிலையில் அந்த பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்று பஸ் விடபட்டிருப்பதால் கிராம மக்கள் அந்த மாணவியை தூக்கிவைத்து கொண்டாடி வருகிறார்கள்.

மதுரை கிழக்கு ஒன்றிய ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் தான் மீனாட்சிபுரம். இந்த கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பாண்டீஸ்வரி  தலைமையில் நடைபெற்றது. அப்போது ஊருக்கு தேவையான அடிப்படை வதிகளான ரோடு வசதி லைட் சுகாதாரம் போன்றவைகள் குறித்து பேசப்பபட்டது. இதே கிராமத்தைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி சஹானாவுடன் இன்னும் பல மாணவிகள் கலந்துகொண்டார்கள்.அப்போது பேசிய மாணவி “ நான் மீனாட்சிபுரத்தில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு மேல் படிக்க வசதி கிடையாது. மேல் படிப்புக்காக மாயாண்டி புரம் கிராமத்திற்கு தான் செல்ல வேண்டி இருக்கிறது. பள்ளிக்கூடம் விட்ட பிறகு அவர்கள் அனைவரும் வீட்டு வருவதற்காக சரியில்லாத சாலையில் காலில் கல் குத்த நடந்து வரவேண்டியது இருக்கிறது. பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டியும் மாயாண்டிபட்டியில் இருந்து பஸ் விட வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார் மாணவி சஹானா. 

சுஹானாவின் கோரிகையை போக்குவரத்துறை அதிகாரிகளுக்கு கிராம சபையின் தீர்மானத்தோடு அனுப்பிவைத்தார் பஞ்சாயத்து தலைவர் பாண்டீஸ்வரி. இதனை ஆய்வு செய்த போக்குவரத்துறை அதிகாரிகள் மாயாண்டிபட்டி பள்ளியில் இருந்து சின்னபெருமாள் பட்டி, பெரியபெருமாள் பட்டி, கிருஷ்ணாபுரம், குலுங்குபட்டி, ஆரப்பள்ளம் சொக்கம்பட்டி வழியாக அந்த பஸ் மீனாட்சி புரத்தை வந்தடைந்தது. இதனால் சுமார் எட்டு கிராமத்தில் படிக்கும் பள்ளி மாணவர்களும் கிராம மக்களும் பயனடைந்திருக்கிறார். மீனாட்சிபுரத்திற்கு பஸ் வரக்காரணமாக இருந்த சஹானாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறன்றது.

            T Balamurukan
 
click me!