இன்று புதன் அஸ்தமனம்...புதனின் நேரடி அருள் பெறும் ராசிகள்...ஆபத்தை சந்திக்கும் ராசிகள்... இன்றைய 12 ராசிகளின்!

By Anu KanFirst Published May 13, 2022, 5:00 AM IST
Highlights

Budhan Perarchi 2022 Palangal: புதன் சுக்கிரன் ஆளும் ரிஷப ராசியில் இருக்கிறார். மே 13-ம் தேதி அதாவது இன்று புதன் அஸ்தமனமாகிறது.இதன் காரணமாக எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழையில் நனைய காத்திருக்கிறார்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தேர்ந்து கொள்ளலாம். 

புதன் அஸ்தமனம்: 

புதன் கிரகம் புத்திசாலித்தனம், தர்க்கம், பேச்சு, கணிதம் மற்றும் நட்பு ஆகியவற்றிற்கு காரணமான கிரகம் என்று கூறப்படுகிறது. ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம், புதன் எழுச்சி மற்றும் அஸ்தமனம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. புதன் கிரகம் அஸ்தமாவதால் சில ராசிக்காரர்களுக்கு பண மழையில் நனைவார்கள். சிலருக்கு கெடு பலன் இருக்கும். அப்படி புதன் அஸ்தமத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு பலன்கள் காத்திருக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேஷம்: 

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு தன் புதன் அஸ்தமனம் காரணமாக, அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிக்கல் ஏற்படும். இருப்பினும், உத்தியோகத்தர்களுக்கு மன உளைச்சல் உண்டாகும். எனவே, எதிலும் நிதானத்தை கையாள்வது அவசியம். 

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு புதன் அஸ்தமனம் சிறப்பான பலன் தரும். எதிலும்,  ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றம் இருக்கும். 

மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் அஸ்தமனம் நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும். எதையும் துணிவுடன் எதிர் கொள்ளும் வல்லமை பிறக்கும். தேவையற்றபயணங்களை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சினை முடிவு பிறக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும்.

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்களுக்கு புதன் அஸ்தமனம் உங்களது கடமைகளை செயல்படுத்துவீர்கள்.  பொருளாதார ஏற்றம் சீராக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். 

சிம்மம்: 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு புதன் அஸ்தமனம் சாதகமாக இருக்கும்.துணிந்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். காலம் கடந்து செய்யும் முயற்சிபலன் தரும். சுய தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் அதிகரிக்கும்.

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் அஸ்தமனம் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு உடல்நலத்தில் அக்கறை தேவை. சிறு சிறு பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். 

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு புதன் அஸ்தமனம் வெளியூர் பயணம் செல்ல சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். சுய தொழிலில் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். 

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு புதன் அஸ்தமனம் வெளிப்படையாக எதையும் பகிர்ந்து கொள்வீர்கள். மனதிற்குள்ளேயே இருந்த குழப்பம் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உரிய சலுகைகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். திருமண யோகம் பிறக்கும்.

தனுசு: 

தனுசில் பிறந்தவர்களுக்கு புதன் அஸ்தமனம் உங்களுடைய தயக்கத்தை தகர்த்து எறிந்து விடுவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். புதிய தொழில் துவங்கும் எண்ணம் அதிகரிக்கும். இருப்பினும், வேலை பளு அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. 

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு  புதன் அஸ்தமனம் காரணமாக மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும்   மன உளைச்சலை தவிர்த்து சிறப்பாக இருப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு புதன் அஸ்தமனம் வெற்றியை தரும். பிரிந்து சென்ற உறவுகள் திரும்பி வரும்.  தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனை நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் அஸ்தமனம் இந்த நாள் சிறப்பாக இருக்கும். இறை சிந்தனை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவியிடையே விருப்பம் அதிகரிக்கும்.

 மேலும் படிக்க....குருவின் பார்வையால் கஜகேசரி யோகம் பெறும் ராசிகள்...செல்வம் செழிக்கும், கோடி நன்மை இருக்கும்!12 ராசிகளின் பலன்!


 

click me!