
அதிரடி சலுகையில் பிஎஸ்என்எல்...! இன்றே முந்துங்கள்..!
தனியார் தொலைத்தொடர்பு நிருவனங்களுக்கு ஈடாக பல்வேறு சிறப்பு சேவை மற்றும் சலுகையை வாரி வழங்க தயாராகி விட்டது பிஎஸ்என்எல் நிறுவனம்.
அதன்படி, தனது போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு புது புது திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. ரூ.525 மற்றும் ரூ.725 திட்டத்தில் முறையே மாதத்திற்கு 40 ஜிபி யும், 50 ஜிபி யும் வழங்க உள்ளது.இது தவிர அன் லிமிடேட் வாய்ஸ் கால்ஸ், தினமும்100 எஸ்எம்எஸ் இலவசம் என தெரிவித்து உள்ளது.
ரூ.798 திட்டம்
120 ஜிபி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால்ஸ் கிடைக்கும்
BSNL Rs 525 Postpaid
இந்த திட்டத்தில் இதற்கு முன்னதாக வெறும் 15 ஜிபி டேட்டாவை மட்டும் வழங்கி வந்தது. ஆனால் தற்போது வாடிக்கையாளர்களின் நலன் கருதி, 40 ஜிபி டேட்டாவை வழங்க முடிவு செய்து உள்ளது.
அன்லிமிடேட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ் பிரீ. இப்படி சலுகை நீண்டுகொண்டே செல்கிறது. வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள இந்த ஆண்டு மட்டும் இரண்டாவது முறையாக சலுகை வழங்குவதில், திட்டங்களை மாற்றி அமைத்து அறிவித்து உள்ளது பிஎஸ்என்எல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.