அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார் என்பதன் சரியான விளக்கம்...!

 
Published : Dec 11, 2017, 06:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார் என்பதன் சரியான விளக்கம்...!

சுருக்கம்

brothers also will not help but adi will help menaing

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்

இராமாயணத்தில் இராமர் சீதாவை பிரிந்த நேரத்தில் ஹனுமன் ( அவருக்கு சிறிய திருவடி என்ற பெயர் உண்டு) தூதனாக சென்று சீதாதேவி இருப்பிடம் அறிந்து கூறி இராமரையும் சீதாதேவியையும் இனைத்தான் 

அது போல் யுத்தத்தில் லஷ்மணன் நாகாஸ்திரத்தால் கட்டுண்டபோது கருடன் ( இவருக்கு பெரிய திருவடி என பெயர்) தன் சிறகை அடித்து கொண்டே வேகமாக பறந்துவந்து அவர்களை நாகாஸ்திரத்தில் இருந்து விடுவித்தான்

அதே போல் ஹனுமன் யுத்தத்தில் மூர்ச்சையான இலக்குமனனை காப்பாற்ற சஞ்சீவிமலையை கொண்டு வந்து காப்பாற்றினான்

இராமாயணத்தில் ராமன் பதினான்காண்டுகள் முடித்து திரும்பி வரவில்லையே என ஏங்கி பரதன் தீக்குளிக்க எத்தனித்தபோது இராமனின் ஆக்ஞைக்கு இணங்க ஹனுமன் இங்கும் தூதனாக சென்று காப்பாற்றினான்

இங்கு இராமனோ பரதனோ இலக்குமணனோ ஒருவருக்கு ஒருவர் உதவமுடியவில்லை

அதே நேரம் பெரிய திருவடியும் சிறிய திருவடியும் விரைந்து வந்து உதவினர்

அதனால் தான் பெரியவர்கள் ஹனுமனையும் கருடனையும் குறிப்பிட்டு அண்ணனும் தம்பியும் உதவமுடியவில்லை என்றால் அவனின் திருவடிகள் நமக்கு உதவும் என்றனர் அதை தான் அடி உதவ வருவது போல் அண்ணன் தம்பி உதவ வர மாட்டார்கள் என்றனர் 

அதாவது ஒருவன் ராமா என விளித்தாலே ஹனுமன் ஓ இவன் ராமா நாமா உச்சரிக்கிறானே என்று எண்ணி அவனுக்கு நன்மைகளை செய்ய ஆரம்பித்து விடுவானாம்

ஆனால் ஶ்ரீராமனோ எதற்காக கூப்பிடுகிறான் என அடுத்த கோரிக்கை வரும் வரை காத்திருப்பானாம்

ஒருவன் நாராயணா என விளித்தால் கருடன் உடனே ஓ நாராயணன் கிளம்பிவிடுவாரே என எண்ணி பக்தனுக்கு உதவ தயாராக தன்  இறக்கைகளை விரித்து கிளம்ப தயாராகி விடுவானாம் 

ஆனால் நாராயணன் இவன் நம்மை தான் கூப்புடுகிறானா என அடுத்த வார்த்தைக்கு காத்திருப்பனாம் 

பரதன் இராம்பிரானிடம் வந்து தன் தாயார் தங்களை காட்டு அனுப்பியது மன்னிக்க முடியாத செயல் எனக்கு இராமன் தான் வேண்டும் அவனுக்கு உரிய இராஜ்யம் வேண்டாம் 

அண்ணன்மார்களே நாட்டுக்கு திரும்புங்கள் என்று வசிஷ்டர் முதலிய மகாபெரியவர்களுடன் வந்து பணிந்த போதும் அண்ணனும் தம்பியும் இணங்காமல் இறுதியில் ஶ்ரீராம்மூர்த்தியின் திருவடி பாதுகையை பெற்று அதன் உதவியுடன் நாட்டை ஆண்டானாம் 

அதாவது அங்கும் அண்ணனும் தம்பியும் பரதனுக்கு உதவவில்லை ஆனால் அவரது திருவடி சம்பந்தமான பாதுகை உதவியது இதை தான் அண்ணன் தம்பி உதவாவிட்டாலும் அடி உதவும் என்றனர் என்றேன்

அன்பர்களே அதனால் தான் பகவானை பற்றாதீர் அவன் திருவடியை பற்றுங்கள் என ஆழ்வார்களும் பூர்வர்களும் பெரியவர்களும் கூறி சென்றனர்...

இப்போது  தெரிகிறதா..அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ  மாட்டார்கள் என்பதன்  பொருள்....  

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Weight Lifting For Women : பெண்கள் கண்டிப்பா 'எடை' தூக்கும் பயிற்சி செய்யனும்!! அதோட நன்மைகள் அவ்ளோ இருக்கு
குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி