தாத்தா காலத்து  நாட்டு கோழி எங்கே ...? நாம் சாப்பிடும் பிராய்லர் கோழி எங்கே ?

Asianet News Tamil  
Published : Feb 04, 2017, 12:45 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
தாத்தா காலத்து  நாட்டு கோழி எங்கே ...? நாம் சாப்பிடும் பிராய்லர் கோழி எங்கே ?

சுருக்கம்

 

சிக்கன் :

நம்ம தாத்தா சாப்பிட்ட சிக்கனுக்கும், இன்று நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் சிக்கனுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன . பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு சிக்கன் . ஆனால் , அது இன்று உயிரைக் கொள்ளும் ஸ்லொ பாய்சன் உணவாக மாறி வருகிறது .

உட்செலுத்தும், ஆன்டி-பயாடிக்ஸ் :

 சிக்கனில் அதன் கருவூறுதல் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆன்டி-பயாடிக்ஸ் அதிகளவில் செலுத்துகின்றனர் . இது கோழியின் ஆரோக்கியத்தையும்  சீரழித்து,  அதை சாப்பிடும் மக்களின் ஆரோக்கியத்தையும் சீரழிக்கிறது  என்பது தான் உண்மை ....

பெரிதாக  வளர :

1950-களில் இருந்த கோழிகளை விட இன்று இருக்கும் கோழிகள் நான்கு மடங்கு உருவில் பெரிதாக இருக்கிறது . மேலும் , ஒரு ஆய்வில் அன்றைய கோழிகளை காட்டிலும் இன்றைய கோழிகளில் கொலஸ்ட்ரால் அளவு 250% அதிகரித்து காணப்படுகிறது என அறியப்பட்டுள்ளது .

மாத்திரை / மருந்து :

மருந்துகள் மூலமாக கோழியின் ஹார்மோனில் ஏற்படுத்தப்படும் மாற்றம் தான் இதற்கான காரணமாக இருக்கிறது . இதை வியாபாரம் மற்றும் லாபம் அதிகம் காண உற்பத்தியாளர்கள் பின்பற்றுகின்றனர் .

ஆர்சனிக் :

ஆர்சனிக் என்பது ஒருவகை ரசாயனம் . இதை இன்று உற்பத்தி செய்யப்படும் கோழிகளில் அதிகம் சேர்க்கின்றனர் . இதை அரசு அறிவுரைக்கு அதிகமான அளவில் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் . இது மனித உடலுக்கும் , ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

நெஞ்சு முழுக்க நஞ்சு

சிக்கனில் நெஞ்சு பகுதி அனைவரும் விரும்பி உண்ணும் பாகம். ஆனால் , இன்று நாம் சாப்பிடும் சிக்கனின் நெஞ்சு பகுதி 97% பாக்டீரியா தாக்கம் நிறைந்து இருக்கிறது என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது இதுவும் நமது ஆரோக்கியத்தை சீரழிக்கும் ஒன்று தான் .

ஆகையால் நாம் பிராய்லர் கோழிகள் அதிகளவில் சாப்பிடுவதை தவிர்த்திடல் வேண்டும்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!