மூளையை பாதிக்கும் முக்கிய காரணி .......!

 
Published : Jan 19, 2017, 01:45 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
மூளையை  பாதிக்கும்  முக்கிய   காரணி .......!

சுருக்கம்

மூளையைப் பாதிக்கும்  சில  முக்கிய  விஷியங்களை  பார்க்கலாம் .

காலை உணவு : 

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.

மற்ற    காரணங்கள் :

அதிகளவாகச் சாப்பிடுவதனால் மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். புகை பிடிப்பதனால் மூளை சுருங்கவும், அல்ரஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. நிறைய இனிப்புச் சாப்பிடுவதனால் புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

மாசு  காற்று :

மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதனால் நமக்குத் தேவையான ஆக்சிஜனை பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்சிஜன் செல்லா விட்டால் மூளை பாதிப்படையும்.

நல்ல  உறக்கம் :

நல்ல உறக்கம் இல்லாமையால் மூளைக்கு ஓய்வு இல்லாமல் போகின்றது. தேவையான அளவு தூங்காமலிருப்பது நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

தலையை மூடிக்கொண்டு நித்திரை செய்வதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறைக்கிறது.

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பிற்பாடு மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால் மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்