பிளட் பிரசர் உள்ளவரா நீங்கள்? உங்களுக்கு ஏற்ற உணவுகள் இவை தான்!

By vinoth kumarFirst Published Oct 19, 2018, 2:10 PM IST
Highlights

ரத்த அழுத்தத்தில் இரு வகை உண்டு. இதயத்தில் இருந்து ரத்தத்தை மற்ற பாகங்களுக்கு அனுப்ப அதிக சிரமப்பட்டால் அது உயர் ரத்தம். அதே போன்று இந்த செயல்பாடு தாமதமானால் குறைந்த ரத்த அழுத்தமாம்.

ரத்த அழுத்தத்தில் இரு வகை உண்டு. இதயத்தில் இருந்து ரத்தத்தை மற்ற பாகங்களுக்கு அனுப்ப அதிக சிரமப்பட்டால் அது உயர் ரத்தம். அதே போன்று இந்த செயல்பாடு தாமதமானால் குறைந்த ரத்த அழுத்தமாம். ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும். இதன் அளவு உயர்ந்தாலோ குறைந்தாலோ உடல் நிலை சீராக இல்லையென அர்த்தம். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உணவுகளாலும் முடியும். 

வாழைப்பழம் 

வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் எ, பி1, சி போன்றவை இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள Bromelain என்ற நொதி இதய நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்டவற்றில் இருந்துகாக்கும்

திராட்சை 

திராட்சையில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். ரத்த நாளங்களை அழுத்தமின்றி செயல்படச்செய்யும்.

பூண்டு 

பூண்டு கொலஸ்டரோலை கட்டுக்குள் வைப்பது மட்டுமன்றி, இதில் உள்ள அல்லிசின் என்ற மூலப்பொருள் ரத்த அழுத்தத்தை சமமான அளவில் வைக்க உதவும். தினமும் 2 பல் பூண்டை தேனில் கலந்து சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் கூடும். 

தர்பூசணி
 
தர்பூசணியில் உள்ள Arginine, citrulline ஆகிய அமினோ அமிலங்கள் ரத்த நாளங்களின் செயல்பாட்டை அதிகரித்து ரத்தத்தை இதயத்திற்கு சீரான முறையில் அனுப்பச் செய்யும். தர்பூசணியை சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் குறையுமாம். 

இளநீர் 

இளநீரில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் சி, கால்சியம், சோடியம் உள்ளிட்டவை ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து கொள்ளும். உயர் ரத்தம் கொண்டவர்கள் இளநீரை குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும். 

மாதுளை 

மாதுளை ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் எதிர்ப்பு சக்தியை கூட்டி மாரடைப்பை தடுக்கும்.

click me!