தயிருடன் பாகற்காயை சேர்த்து சாப்பிடக்கூடாது..!! ஏன்னு தெரிஞ்சுக்கோங்க..!!

By Dinesh TGFirst Published Sep 25, 2022, 2:01 PM IST
Highlights

பாகற்காயை சாப்பிட்ட பிறகு குறிப்பிட்ட உணவுப் பொருட்களை நாம் உண்ணக் கூடாது. இந்த தகவல் நம்மில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். ஆனால் அறிவியல் விதிமுறைப் படி, பாகற்காயுடன் சாப்பிடக் கூடாத சில உணவுப் பொருட்கள் பட்டியலிப்பட்டுள்ளன.
 

பாகற்காய் மூலம் நமது உடலுக்கு பல்வேறு சத்துகள் கிடைக்கின்றன. சாப்பிடுவதற்கு கசப்பாக இருந்தாலும், அது பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. அதேசமயத்தில் வயிற்றுப் பிரச்னை கொண்டவர்களுக்கு பாகற்காய் அருமருந்தாக செயல்படுகிறது. பல்வேறு நன்மைகளை கொண்டுள்ள பாகற்காயை சாப்பிட்ட பிறகு, அதனுடைய பலன்கள் உடலில் பூரணமாக சேரவேண்டும். அப்போது நாம் குறிப்பிட்ட சில உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. நோய் முறிவு கொண்ட பாகற்காய் வீரியம் கொண்ட காயாகும். அதனால் அதை சாப்பிட்டுவிட்டு தவிர்க்கப்பட வேண்டிய உணவுகளை உடன் எடுத்துக்கொள்வது உடநலனுக்கு கேடு தரும். அந்த வகையில் பாகற்காயை சாப்பிடும் போது அல்லது சாப்பிட்ட பிறகு, நாம் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளை குறித்து ஒவ்வொன்றாக தெரிந்துகொள்வோம்.

பால்

எப்போதும் கசப்பான ஒன்றை சாப்பிட்ட பிறகு, பால் குடிப்பது நல்லது கிடையாது. இது மருந்துகளுக்கும் பொருந்தும். அதனால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்னை ஏற்படலாம். அதனால் பாகற்காயை சாப்பிட்டதும் பால் சாப்பிடவே கூடாது. ஒருவேளை நீங்கள் தெரியாமல் பால் எடுத்துக் கொண்டால், உங்களுக்கு மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் வயிற்று எரிச்சல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஒருவேளை உங்களுக்கு ஏற்கனவே வயிறு சார்ந்த பிரச்னைகள் இருந்தால், பாகற்காயை சாப்பிட்டது பால் பருவதை தவிர்ப்பது அறவே நல்லது.

முள்ளங்கி

நீங்கள் பாகற்காயை சாப்பிட்டதும், அதேநாளில் முள்ளங்கி அல்லது முள்ளங்கியால் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்ளக் கூடாது. மீறி நீங்கள் சாப்பிட்டால், இது உடல்நலனுக்கே பிரச்னையாக உருவெடுக்கும். சுவை, தன்மை மற்றும் பண்புகளில் முள்ளங்கியும் பாகற்காயும் எதிர்நிலைப்பாட்டை கொண்டவை. அது இரண்டும் சேரும் போது, வயிற்றில் அசிடிட்டி உண்டாகும். ஒருசிலருக்கு சளி மற்றும் கபம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. முடிந்தவரை இவை இரண்டையும் சேர்க்காமல் சாப்பிட முயலுங்கள்.

தயிர்

பலரும் பாகற்காயை மோருடன் ஊற வைத்து வற்றல் செய்து சாப்பிடுவார்கள். வற்றலுக்கான செயல்முறை என்பது முற்றிலும் வேறு. ஆனால் பாகற்காயை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும். தயிருடன் பாகற்காயை ஊறவைத்து கசப்பு போனவுடன் கழுவி சமைத்து சாப்பிடுவார்கள். இந்த செயல்முறையும் உடலுக்கு தீங்கினை வரவழைக்கும். பாகற்காயை, அதன் கசப்பு சுவையுடன் சாப்பிடுவது மட்டுமே நல்ல பலனை தரும். கசப்புச்சுவையை விடுத்து சமைத்து சாப்பிட முயற்சிப்பது உடலுக்கு எந்த பலனையும் தராது.

click me!