பிரசவத்துக்கு பிறகு எப்போது தம்பதிகள் உறவில் ஈடுபடலாம்..?? மருத்துவர்கள் கூறுவது இதுதான்..!!

By Dinesh TG  |  First Published Sep 24, 2022, 4:07 PM IST

குழந்தை பிறந்தவுடன் கணவன், மனைவி இருவரும் எத்தனை நாட்கள் கழித்து உறவுகொள்ளலாம் என்கிற சந்தேகம் பல தம்பதிகளிடம் நிலவுகிறது. அதுகுறித்த விவரங்களை மருத்துவம் சார்ந்த தகவல்களுடன் விரிவாக பார்க்கலாம்.
 


பொதுவாக பிரசவம் முடிந்து இத்தனை நாட்கள் கழித்து உறவுக்கொள்ளலாம் என்கிற வரைமுறைகள் கிடையாது. எனினும், குழந்தை பிறந்து 6 வாரங்களுக்கு பிறகு உறவு கொள்ளவதற்கு, மருத்துவர்கள் தரப்பிலிருந்து தம்பதிகளுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. அதாவது, கர்ப்பமாகும் போது ஒவ்வொரு மாதமும் குழந்தையின் வளர்ச்சியை பொறுத்து கர்ப்பப்பை விரிவடையும். 

குழந்தை பிறந்ததும் கர்ப்பப்பை சுருங்கி விடும். அதற்கு 6 வாரங்கள் வரை தேவைப்படும். அதன்காரணமாகவே மருத்துவர்கள் பிரசவத்துக்கு பிறகு மீண்டும் உறவுகொள்ள குறிப்பிட்ட கால இடைவெளி அவசியம் என்று  கூறுகின்றனர். எனினும் சுகப் பிரசவம் மற்றும் சீசேரியனைப் பொறுத்து, இக்குறிப்பிட்ட கால இடைவெளியை முடிவு செய்வதில் மாறுபாடும் உண்டு.

Tap to resize

Latest Videos

ஒருவேளை சுகப்பிரசவம் என்றால் பெண்ணுறுப்பு பகுதியில் தையல் போடப்பட்டு இருக்கும். அது ஆறுவதற்கு 6 முதல் 8 வாரங்கள் வரை தேவைப்படும். அதற்கு பிறகு தம்பதிகள் உறவுகொள்ளலாம் என்று பொதுவான அறிவுரையை மருத்துவர்கள் வழங்குகின்றனர். சீசேரியன் என்கிற போது, ஒவ்வொருவருடைய எதிர்ப்புச் சக்தி திறனை பொறுத்து கால இடைவெளி வகுக்கப்படுகிறது.

உங்களுடைய ’செக்ஸ் லைஃப்’ சிறக்க பிரபல நடிகர் சொல்லும் சூத்திரங்கள்..!!

பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உடனடியாக கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு குறைவு தான். மேலும் பிரசவமான 6 மாதங்கள் வரை  மாதவிடாய் ஏற்படால் இருக்கும் பெண்களுக்கும் உடனடியாக கருத்தரிக்காது. ஒருசிலருக்கு பிரசவம் முடிந்த அடுத்த வாரமேக் கூட மாதவிடாய் ஏற்படக்கூடும். இது ஒவ்வொருவருடைய உடலமைப்பை பொறுத்தது.

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் முந்திரி..!

எனினும் பிரசவம் முடிந்தவுடன் மாதவிடாய் ஏற்படும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு காரணம் அவர்கள் கணவனுடன் உறவுகொள்ளும் போது, கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் இதுகுறித்து சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில், உடனடியாக உரிய மகப்பேறு மருத்துவரை சந்தித்து அவர்கள் விளக்கம் பெறுவது அவசியமாகிறது.

உடனடியாக மீண்டும் குழந்தையை விரும்பாத தம்பதிகள் அல்லது பெண்கள் உறவுக்கு முன் கருத்தடையை பயன்படுத்தலாம் மற்றும் ஆணுறையை உபயோகிக்கலாம். அதேசமயத்தில் பிரசவம் முடிந்து, சில பெண்களுக்கு பல நாட்கள் அல்லது வாரங்கள் உறவில் ஈடுபாடு இல்லாமல் இருக்கும். அதுவும் இயற்கையான விஷயம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!