உலகின் மிகப்பெரிய கோடீஸ்வர பிச்சைக்காரர் இவர்தான்! மும்பை வீடு ரூ.1.4 கோடி... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By SG Balan  |  First Published Sep 11, 2023, 8:59 PM IST

பாரத் ஜெயின் தானேயில் இரண்டு கடைகளை வாங்கியுள்ளார். இதன் மூலம் அவருக்கு மாத வாடகையாக 30,000 ரூபாய் கிடைக்கிறது.


பிச்சை எடுப்பதை அனைவரும் கீழான செயலாகப் பார்க்கிறோம். பிச்சை எடுப்பவர்களைப் பார்த்தால் ஏளனமாக நினைக்கிறோம். ஆனால், பிச்சை எடுப்பதை வெற்றிகரமான தொழிலாகக் கொண்ட சிலரும் இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் ஆச்சரியமாக இருக்கும். மும்பையில் வசிக்கும் பாரத் ஜெயின் என்பவர் உலகத்திலேயே பணக்கார பிச்சைக்காரர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார்.

பலர் நீண்ட நேரம் உழைத்து சில நூறு ரூபாய்களைக்கூட சம்பாதிக்க முடியாமல் சிரமப்படும் சூழலில், பாரத் ஜெயின் தினமும் 10 முதல் 12 மணிநேரம் பிச்சை எடுத்து 2,000 முதல் 2,500 ரூபாய் சம்பாதிக்க முடிகிறது. பாரத் ஜெயின் பெரும்பாலும் மும்பையின் ஆசாத் மைதானத்திலோ சத்ரபதி சிவாஜி முனையத்திலோ பிச்சை எடுப்பதைக் காணலாம். இவரது மாத வருமானம் ரூ.60,000 முதல் ரூ.75,000 வரை இருக்குமாம்.

Tap to resize

Latest Videos

ஏ.டி.எம். பின் நம்பர் மறந்துவிட்டதா? ஈசியாக புதிய பின் நம்பர் பெற இரண்டு வழிகள் இருக்கு!

பாரத் ஜெயினுக்கு மும்பையில் ரூ.1.4 கோடி மதிப்புள்ள இரண்டு வீடுகள் இருப்பதாகவும் பாரத் ஜெயின் வசம் உள்ள சொத்துகளின் மதிப்பு 7.5 பில்லியன் டாலர் என்றும் கூறப்படுகிறது. கூடுதலாக, அவர் தானேயில் இரண்டு கடைகளை வாங்கியுள்ளார். அவற்றை வாடகைக்கு விட்டதில் இருந்து அவருக்கு மாதம் தோறும் ரூ.30,000 வருமானம் கிடைக்கிறது.

வறுமை காரணமாக தனது படிப்பைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட பாரத் ஜெயின் பிச்சை எடுப்பதைத் தொழிலாகச் செய்ய முடிவு செய்துள்ளார். இவர் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசிக்கிறார். தான் படிக்காதபோதும், தனது பிள்ளைகளை கான்வென்ட் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார். மகன்கள் இருவரும் இப்போது கல்லூரிப் படிப்பையும் முடித்து பட்டம் பெற்றுள்ளனர்.

இவ்வளவு செல்வச் செழிப்புடன் இருந்தும் பாரத் ஜெயின் தொடர்ந்து தெருக்களில் பிச்சை எடுக்கிறார். தனது குடும்பத்தினருடன் பரேலில் உள்ள சிறிய குடியிருப்பில் தான் வசிக்கிறார். அவரது குடும்பத்தினர் ஒரு ஸ்டேஷனரி கடையை நடத்தி வருகின்றனர்.

சந்திரயானுக்குப் பிறகு சமுத்திரயான்! ஆழ்கடலை ஆய்வு செய்யும் திட்டத்துடன் இந்திய விஞ்ஞானிகள்!

click me!