பெற்றோர்களே உஷார்..! மொபைல் உலகத்தில் மூழ்கும் பிள்ளைகள்.. காத்திருக்கும் ஆபத்துகள்...

manimegalai a   | Asianet News
Published : Jan 07, 2022, 01:38 PM ISTUpdated : Jan 07, 2022, 01:43 PM IST
பெற்றோர்களே உஷார்..! மொபைல் உலகத்தில் மூழ்கும் பிள்ளைகள்.. காத்திருக்கும் ஆபத்துகள்...

சுருக்கம்

பாதுகாப்பான முறையில் இணையத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க தேவையான முக்கிய நான்கு உதவிக்குறிப்புகளைப் பார்ப்போம்.  

இன்றைய முழு உலகமும் ஆன்லைன் மூலம் இயங்கி கொண்டிருக்கிறது. அதற்குக் கல்வித்துறையும் விலக்கல்ல, நடப்பாட்டில் சிறிய குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை உள்ள அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே, இன்றைய தலைமுறையினர், லேப்டாப் வழியே கூகுள் ஹேங்அவுட் (Google Hangouts),கூகுள் மீட் (Google Meet) போன்ற வீடியோ மீட்டிங் ஆப்களின் மூலம் தங்கள் கல்வியை தொடர்கின்றனர். அதுமட்டுமின்றி, தனியார் பள்ளிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களின் கல்வி சார்ந்த கண்ணோட்டத்தில் வழங்கப்பட்டாலும் இதனை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிப்பது அவசியம்.

ஏனெனில், ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளின் மனநிலை மட்டுமல்ல, உடல்நிலையும் மோசமடையும். குறிப்பாக, ஆன்லைன் வகுப்புகளுக்காகத் தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் ஆண்ட்ராய்டு, லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் பொருள்களைத் பயன்படுத்தும் போது, மாணவர்களின் கண்கள் அதிகம் பாதிக்கப்படும். மேலும், சமூக வலைதளங்களை பயன்படுத்தும் குழந்தைகள், அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த சில நாட்களாக, ஆன்லைன் வகுப்பில் இணையும் பெண் குழந்தைகளின் புகைப்படங்கள், சமூக விரோதிகளால் மார்ஃபிங் செய்யப்படுகிறது. அதேபோன்று, மூன்றில் ஒரு குழந்தை ஆன்லைன் மோசடி நபர்களிடம் மாட்டிக் கொள்கின்றது . அதுமட்டுமின்றி, ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளின் மனநிலை, பக்குவம், பாலியல் விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, பாதுகாப்பான முறையில் இணையத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க தேவையான முக்கிய நான்கு உதவிக்குறிப்புகளைப் பார்ப்போம்.

 குழந்தைகளுடன் டிஜிட்டல் யுகத்தில் ஈடுபடுங்கள்:

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் ஆன்லைனில் நேரத்தை செலவிடுங்கள். உங்கள் குழந்தைகள் வீடியோ கேம், ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிட்டால், அவர்கள் அருகில் உட்கார்ந்து கவனித்துக்கொள்ளுங்கள். அவர்கள் யாருடன் நண்பர்களாக இருக்கிறார்கள், எந்த மாதிரியான விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்களிடம் ஒரு நண்பர் போல அடிக்கடி பேசுங்கள்.

பெற்றோர்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை பின்பற்றவும்:

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் ஆகியவற்றில் மக்கள் எவற்றை பகிர்ந்துகொள்கின்றனர், யாருடன் பகிர்ந்து கொள்கின்றனர், எதைப் பார்க்கின்றனர், யார் அவர்களைத் தொடர்புகொள்ளலாம் என்பனவற்றில் கட்டுப்பாட்டைக் கொடுக்கும் அமைப்புகளைக் கொண்டுள்ளன. இவற்றில் பல சிறுவர்களும் இணைகிறார்கள். இன்றைய குழந்தைகள் பெரும்பாலும், தங்கள் பெற்றோர்களின் செல்ஃபோன்களை பயன்படுத்துகின்றன. எனவே, பெற்றோர்கள் தங்கள் செல்போனில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

 குடும்ப விதிகளை அமைக்கவும்:

உங்கள் குழந்தைகளின் வயதைப் பொருத்து, சம்மந்தமில்லாத நெருக்கமான படங்கள் போன்ற சில வகையான புகைப்படங்களைப் பகிர்வதால் ஏற்படும், கடுமையான விளைவுகளை (சட்ட விளைவுகள் போன்றவை) பற்றி நீங்கள் பேசலாம்.‘இரவு 8 மணிக்குப் பிறகு தொலைக்காட்சி பார்க்கக் கூடாது' அல்லது ‘படுக்கையறையில் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது.’ இதுபோன்ற விதிகளை உங்களது வீட்டில் அமைத்து, அவற்றை நீங்களும் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.

 உங்கள் குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்:

 இன்றைய தொழில்நுட்பம் அதிக வளர்ச்சியைக் கொண்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் இவற்றை வேகமாகப் பின்பற்றுபவர்கள். உங்கள் குழந்தைகள் புதிய ஆப் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கினால், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இது உங்கள் குழந்தையுடன் நீங்கள் கலந்துரையாடுவதற்கும், அவர்கள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கும், ஆன்லைன் பாதுகாப்பைப் பற்றி உரையாடுவதற்கும் ஒரு வாய்ப்பாகும்.  

இதுதான் இன்றைய தலைமுறைக்கு தேவையாக இருக்கிறது. அதாவது குழந்தைகளுக்கு முறையான ஆன்லைன் பயன்பாடு, பெற்றோர்களுக்கு ஆன்லைன் விழிப்புணர்வும் வேண்டும்.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Summer Drinks: வெயிலை சமாளிக்க 9 சூப்பர் ஹோம்மேட் பானங்கள்! உடம்புக்கும் நல்லது, தெம்பாவும் இருக்கலாம்!
Climate Change: வெறும் ஆரம்பம்தான்! 2050-க்குள் இத்தனை கோடி மரணங்களா? உலகையே உலுக்கும் புள்ளிவிவரம்!