
பிரிட்ஜ், நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. தற்போது நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் அதிக அளவில் காணப்படுகிறது. இன்னும் சொல்ல போனால் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் பிரிட்ஜ் வாங்குகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இது அவசியம், ஏனெனில் இது காய்கறிகள் போன்றவற்றை புதியதாகவும், உணவுப் பொருட்களை கெட்டுப்போகாமல் பாதுகாக்கவும் செய்கிறது. ஆனால் அனைவரும் பிரிட்ஜ் பயன்படுத்தினாலும் அதன் பராமரிப்பில் பலரும் அதிக கவனம் செலுத்துவதில்லை.
குறிப்பாக பிரிட்ஜில் உள்ள ஃப்ரீசர் குளிர்விக்க எவ்வளவு நேரம் ஆகிறது? என்ற கேள்விக்கு பலரால் பதில் சொல்ல முடியாமல் போகலாம். ஆனால், சமீபகாலமாக வரும் அட்வான்ஸ்டு மாடல் குளிர்சாதனப் பெட்டிகளில் ஆட்டோ டிஃப்ராஸ்ட் ஆப்ஷன் இருப்பதால் பிரச்னை இல்லை. ஆனால் பழைய மாடல் குளிர்சாதன பெட்டிகளில் இது இல்லை. இதனால் பிரீசரில் பணி கட்டிகள் கட்ட ஆரம்பிக்கிறது.உண்மையில், ஃப்ரீசரில் ஏன் பனி பாறைகள் உருவாகின்றன? அதை நீக்குவதற்கான வழி என்ன போன்ற விவரங்களை இப்போது இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: உங்கள் ஃப்ரிட்ஜில் துர்நாற்றம் வீசுகிறதா..? அப்போ இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க...
பொதுவாகவே, பெரும்பாலான வீடுகளில் ஒற்றை கதவு கொண்ட பிரிட்ஜ் தான் இருக்கும். இந்த மாடலில் பிரிட்ஜ் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். அதாவது, ஃப்ரீசரில் எத்தனை முறை சுத்தம் செய்தாலும் ஃப்ரீசரில் மலை போல் பனிக்கட்டியாக இருக்கும். இதற்குக் காரணம் பிரிட்ஜ் கதவு பழுதடையும் போது, அதாவது ரப்பர் கெட்டுப்போய் வெளிக்காட்டி உள்ளே வரும்போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
இதையும் படிங்க: இந்த பழங்களை தப்பி தவறி கூட பிரிட்ஜில் வைக்காதீங்க...ஏன் தெரியுமா?
ஃப்ரீசரில் பனி கட்டிய பிறகு ஃப்ரிட்ஜ் குளிரூட்டும் திறன் குறைகிறது. மற்றும் அதிக நேரம் இருக்கிறது இதன் காரணமாக மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது மற்றும் உணவுப் பொருட்களை சரியாக குளிர்ச்சியாக வைத்திருக்க முடியாது. அதுபோல் தண்ணீரை சுத்தம் செய்யும் நீர் வடிகட்டி சரியாக வேலை செய்யவில்லை என்றால் பனிப்பாறை உருவாகும். இது உங்கள் குளிர்சாதனை பெட்டியில் உள்ள அனைத்து பொருட்களையும் முறைய வைக்கும் எனவே தண்ணீர் வடிகட்டியை மாற்றுவது தீர்வு.
மேலும் பிரிட்ஜில் ஒரு குழாய் உள்ளது அது கீழே இருந்து தண்ணீரை வெளியேற்றும். இந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டால் ஃப்ரிட்ஜில் ஐஸ் கட்டி உறையத் தொடங்கும். எனவே குழாயை அடிக்கடி சுத்தம் செய்து அழுக்குகளை கழுவ சோப்பை பயன்படுத்தவும். குழாயில் ஏதாவது சிக்கினால் அதை உடனே வெளியே இழுக்க ஒரு சரத்தை பயன்படுத்தலாம். ஃப்ரிட்ஜின் பின்புறம் குளிர்ச்சியாக இருக்க உதவும் சுருள்கள் உள்ளன. இந்த சுருள் அழுக்காகினாலோ அல்லது பனியால் மூடப்பட்டாலும் பிரிட்ஜ் சரியாக வேலை செய்யாது. மேலும் உங்கள் பிரிட்ஜ் அதிக பணி குவிந்து கொண்டே இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.