கருவுறுதலை அதிகரிக்க சாப்பிட வேண்டிய பழம் எது? ஆண்களும் பெண்களும் கட்டாயம் சாப்பிடலாம்!

Ansgar R |  
Published : Jan 12, 2024, 11:58 PM IST
கருவுறுதலை அதிகரிக்க சாப்பிட வேண்டிய பழம் எது? ஆண்களும் பெண்களும் கட்டாயம் சாப்பிடலாம்!

சுருக்கம்

Fertility Diet : மாதுளம் பழத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது நாம் அறிந்ததே. இப்பழத்தை சாப்பிட்டால் ரத்தசோகை பிரச்சனை குறைகிறது. ஆனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதல் தொடர்பான பிரச்சனைகள் கூட நீங்குமாம் தெரியுமா?

மாதுளை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பயனுள்ள பழமாகும். இப்பழத்தை சாப்பிட்டால் வயிற்றில் ரத்தம் பெருகும். மேலும், இந்த பழம் இதயம், தோல், வயிறு, மூளை மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க பயனுள்ளதாக இருக்கும். இந்த பழத்தை சாப்பிடுவதால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதல் அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

மாதுளை பழத்தில் புரதங்கள், வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என பல வகையான சத்துக்கள் உள்ளன. இந்த பழத்தை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் எலும்புகள் வலுவடையும். இந்த பழம் தசைகளை வளர்ப்பதற்கும் நன்மை பயக்கும். இந்த பழத்தை சாப்பிட்டால் நமது செரிமானம் சரியாகும். 

எலி வால் மாதிரி முடி இருக்குனு ஃபீல் பண்றீங்களா..? வாழைப்பழ மாஸ்க் ட்ரை பண்ணுங்க..!

ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் பின்பற்றும் வாழ்க்கை முறை பல நோய்களுக்கு நம்மை ஆளாக்குகிறது. பசி எடுத்தால் வயிற்றை நிரம்புவதைத்தான் சாப்பிடுகிறோம். ஆனால் அவை ஆரோக்கியத்திற்கு நல்லதா? இல்லையா? என்பது குறித்து நாம் கவலைப்படுவதில்லை. மேலும் தூங்குவதற்கும் எழுவதற்கும் குறிப்பிட்ட நேரத்தை பின்பற்றுவதில்லை. குறிப்பாக உடற்பயிற்சியில் இருந்து விலகி இருப்பது. ஆனால் இவை அனைத்தும் நம் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கின்றன.

இன்றைய காலத்தில் ஆண்களும் பெண்களும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை கருவுறுதல் பிரச்சனை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததே என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே ஆண்களுக்கும், பெண்களுக்கும் கருவுறுதலை அதிகரிக்க மாதுளை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மாதுளை உண்மையில் நமக்கு என்ன நன்மைகளை செய்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

மாதுளை சாப்பிடுவதால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது விந்தணுவின் தரத்தையும் மேம்படுத்துகிறது. இப்பழம் பாலுணர்வை ஏற்படுத்தும் உணவாகவும் உள்ளது. இதை சாப்பிடுவதால் பாலியல் ஆசை அதிகரிக்கும். கருவுறுதல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஹார்மோன் பிரச்சனையால் அவதிப்படும் பெண்களுக்கு மாதுளம் பழம் மிகவும் நன்மை பயக்கும். இதனை சாப்பிடுவதன் மூலம் பிசிஓஎஸ், கருவுறுதல், முடி உதிர்தல், முகப்பரு போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க...சாப்பிட்ட பின் 'இத' குடியுங்கள்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Garlic Smell on Hands : பூண்டு உரித்த பிசுபிசுப்பு, வாடையை நீக்கும் சூப்பர் டிப்ஸ்! யாருக்குமே தெரியாத சீக்ரெட்
Vaginal Dryness : பெண்களே! பிறப்புறுப்பு வறட்சியை அலட்சியம் செய்யாதீங்க; தேங்காய் எண்ணெயை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!