உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க ஆசையா? ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்கோ பாஸ்!

By manimegalai aFirst Published Jan 13, 2022, 11:53 AM IST
Highlights

உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க, நமது முன்னோர்கள் 3 விதமான அற்புத முறைகளை பின்பற்றி வந்துள்ளனர். 

இன்றைய நவீன உலகில், உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க உடற்பயிற்சி, ஜிம்மில் நேரம் கழிப்பது இப்படி நிறைய விஷயங்களில் தங்களை ஈடுபடுத்தி இருப்பீர்கள். ஆனால், துரித உணவு பழக்கம், உடல் மெலிய சாப்பிடாமல் இருப்பது போன்றவை உங்கள் உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மேற்கூறிய எதையும் பின்பற்றாமல் நமது முன்னோர்கள் கூட தங்களது உடம்பை கச்சிதமாக வைத்து கொள்ள 3 விதமான அற்புத முறைகளை பின்பற்றி வந்துள்ளனர். 

நீங்கள் இது குறித்து உங்கள் தாத்தா, பாட்டியிடம் எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்களா?அவர்கள் உடம்பை பராமரிப்பதற்கு அவர்கள் கொடுத்துள்ள முக்கியத்துவம் காலத்தால் அழியாத பொக்கிஷம். இதற்காக அவர்கள் மேற்கொண்ட முறைகள் எல்லாம் பாதுகாப்பானதாகவும் எந்த வித பக்க விளைவுகள் இல்லாத வண்ணமும் இருந்துள்ளது. மேலும் நீண்ட நாள் பயனும் கிடைத்தது. ஆனால், தற்போது நாம் எவ்வளவு தான் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து தசைகளை ஏத்தினாலும் ஒரு வாரம் பயிற்சியை விட்டால் போதும் எல்லாம் மாறிவிடும். உங்கள் கட்டுடல் எல்லாம் காணாமல் போய்விடும். ஏன், இந்த மாற்றம் ஏற்படுகிறது என்றால் நாம் உடற்பயிற்சி செய்யும் அளவிற்கு நமது வாழ்க்கையில் சில நல்ல பழக்கத்திற்கு இடம் கொடுப்பதில்லை. அதனால் தான் நம் உடல் என்றும் கச்சிதமாக இருக்க முடிவதில்லை. 

நமது முன்னோர்கள் உடம்பை கச்சிதமாக வைத்து கொள்ள பின்பற்றி வந்த 3  அற்புத முறைகள் என்ன என்பதை கீழே பார்க்கலாம்.


 
யோகா: 

யோகா முந்தைய காலத்தில் யோகா என்பது ஒரு உடற்பயிற்சி ஆக இல்லாமல் ஆன்மீக கலையாக பார்க்கப்பட்டது. எனவே தான் அந்த காலத்தில் எல்லா குழந்தைகளும், இளைஞர்களும் இந்த பயிற்சியை கற்று கொண்டு தினமும் செய்தனர். யோகா என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி. இதை தினமும் செய்யும் போது உங்கள் உடல் மட்டுமல்ல மனமும் கச்சிதமாக இருக்கும். மனதில் ஒரு அமைதி நிலவும். மனக் குழப்பங்கள், மன அழுத்தம் இல்லாத நிலை கிடைக்கும். எனவே நீங்களும் தினசரி சிறிது நேரம் யோகா பயிற்சி மேற்கொண்டால் நீண்ட ஆயுளோடு கட்டுடல் மேனியுடன் வாழ முடியும்.  

உடலுக்கு வேலை  கொடுப்பது: 

இன்றைய நவீன உலகில், பல் துலக்குவதில் இருந்து பாத்திரம் துலக்குவது முதல் அனைத்திற்கும் இயந்திர செயல்பாடு உள்ளது. ஆனால், முந்தைய காலத்தில் தினசரி நடவடிக்கைகள்  நம் முன்னோர்கள் நிறைய வேலைகளை அவர்களே இறங்கி செய்வர். எனவே தான் அவர்கள் நிறைய ஆற்றலுடன் மற்றும் வலிமையான தசைகளுடன் காணப்பட்டனர். உதாரணமாக பார்த்தால் அவர்களே தங்கள் வீடுகளை கட்டுதல், தோட்டம் அமைத்தல், மரம் அறுத்தல், சமைத்தல் போன்ற உடலுக்கு வேலை கொடுக்கும் வேலைகளை செய்து வந்தனர். மேலும் புதிய வாகனங்கள் கண்டுபிடிப்பதற்கு முன் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் மேற்கொள்ள தங்களது கால்களையோ அல்லது மிதிவண்டிகளையோ பயன்படுத்தினர். தங்கள் உடல் உழைப்பை செலவு செய்து களத்தில் இறங்கி விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். ஆனால் நாம் இப்பொழுது எல்லாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து கணினி வேலைகளை தான் செய்கிறோம். எனவே மேற்கண்ட வேலைகளை நாம் செய்யும் போது நமது உடலில் உள்ள ஆற்றல் மற்றும் கலோரிகள் செலவழிந்து நாம்  கட்டுக்கோப்பாக இருக்க முடியும். 

ஆரோக்கியமான உணவுகள்:

சமச்சீரான உணவுகள் நீங்கள் முந்தைய காலத்திற்கு சென்றால் நம் இந்தியாவில் எந்த வித பாஸ்ட் புட்டும் இருந்து இருக்காது. சில உணவுக் கடைகளை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும். ஏனெனில் நமது முன்னோர்கள் எல்லாரும் ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டனர். இதனால் அவர்களுக்கு அதிகமான கொலஸ்ட்ரால், சர்க்கரை வியாதி போன்ற எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. எனவே நாமும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஹோட்டல் உணவுகள் இவற்றை தவிர்த்து வீட்டிலேயே ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக நாமும் கட்டுகோப்பாகவும், ஆரோக்கியமாகவும்  வாழலாம்.
 

click me!