Ganesha workship: திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க...விநாயகர் சிறப்பு விரத வழிபாடு...!!

By manimegalai aFirst Published Jan 24, 2022, 6:40 AM IST
Highlights

தை மாதத்தின் அவிட்டம் நட்சத்திரம் அன்று, விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் திருமணத் தடை  நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.

நீண்ட நாட்கள் கல்யாணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க, இந்த விரதங்களை மேற்கொள்வது மன ரீதியாக மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

ஆன்மிக ரீதியாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்களில் விரதம் என்பது, அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. விரதம் இருப்பதனால் உடல் மற்றும் மன நிலையில் அமைதி மற்றும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை மட்டும் உணவு அருந்துவது, நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது, அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது, நீர், ஜூஸ், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது என பல முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது உறுதி என்று ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.சிறப்பு மிக்க இந்த தை மாதத்தில், திருமணத் தடை நீங்க உள்ளிட்ட, பல சிறப்பு வாய்ந்த விரத வழிபாட்டு தினங்கள் வருகின்றன. அவற்றை சுருக்கமாக கீழே தெரிந்து கொள்ளலாம்.

தை மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த விரத வழிபாடுகள்

தை மாதத்தின் அவிட்டம் நட்சத்திரம் அன்று, விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் திருமணத் தடை  நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.

தை மாதத்தின் அவிட்டம் நட்சத்திரம் அன்று, விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் திருமணத் தடை  நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.அரச மரத்தின் அடியில், மேற்கு நோக்கி வீற்றிருக்கும் விநாயகப் பெருமானை, தை மாதத்தில் பூச நட்சத்திரம் அன்று விரதம் இருந்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால், பணப் பற்றாக்குறை தீரும். செல்வ வளம் கொழிக்கும். பவுர்ணமி, தமிழ் மாதப் பிறப்பு, சதுர்த்தி திதி, தை மாதத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து கணபதியை வழிபாடு செய்வதால், செய்யும் காரியங்களில் ஏற்பட்ட அனைத்து தடைகளும் விலகும்.

சிவன்- பார்வதி ஆகியோருடன் விநாயகர் வீற்றிருக்கும் உருவத்தை  'கஜமுக அனுக்கிரக மூர்த்தி' என்பார்கள். பெற்றோருடன் விநாயகப்பெருமான் வீற்றிருக்கும் இந்தத் திருக்கோலத்தை வழிபடுவதால் பல சிறப்புகள் வந்துசேரும். விநாயகர் வீற்றிருக்கும் இடத்திற்கு 'ஆனந்த புவனம்' என்று பெயர்.

வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு, தை மாதத்தின் அவிட்டம் நட்சத்திரம் அன்று விரதம் இருந்து நெல் பொரியால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யுங்கள். அதோடு ஏழை பெண்களுக்கு தானம் கொடுங்கள். அப்படிச் செய்தால், திருமணத் தடை விரைவிலேயே விலகி சுபகாரியம் முடிவாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில், விரதம் இருந்து தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், பசு நெய், விளக்கெண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களை கலந்து விளக்கேற்றி வழிபட்டால், தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

தஞ்சாவூர் நகரில் அமைந்துள்ள சக்கரபாணி திருக்கோவிலில், சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கும் விநாயகரை தரிசிக்கலாம். அதே போல் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் குழலூதும் விநாயகர் காணப்படுகிறார். இதுபோன்ற வித்தியாசமான கோலத்தில் உள்ள விநாயகரை வழிபடும் போது, எதிர்பார்த்த காரியங்கள் எந்த இடையூறும் இன்றி நடந்தேறும் என்பது நம்பிக்கை.
 

click me!