மனநலம் மற்றும் உடல்நலம்.. சுயஇன்பத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? - பெண்களே நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!

By Asianet Tamil  |  First Published Sep 15, 2023, 12:01 AM IST

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்களின் அணுகல் மற்றும் பாலியல் கல்வி பற்றிய கூடுதல் புரிதல் மூலம், பெண்கள் சுய இன்பம் குறித்து ஆராய்வதில் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். ஆனால் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலைகளை மனதில் கொண்டு நீங்கள் அதைச் சரியாகச் செய்வது முக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.


சுயஇன்பம் என்றால் என்ன?

சுயஇன்பம் என்பது பாலியல் இன்பத்திற்காக தங்கள் உடலை நீங்களே தொடுவதை உள்ளடக்கியது தான். இந்த அனுபவம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கலாம். மேலும் நீங்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் உடலை ரசிப்பதைப் பொறுத்து இது மாறுபடும்.

Tap to resize

Latest Videos

undefined

சுயஇன்பம் மனநிலையை வலுப்படுத்தும்

மருத்துவ உளவியலாளர்கள் அளிக்கும் தகவலின்படி சுயஇன்பத்தின் போது டோபமைன் மற்றும் எண்டோர்பின்கள் வெளியிடப்படுகின்றன. இது உச்சகட்ட இன்பத்தை அடைய உதவுகிறது, டோபமைன் என்பது ஒரு வகையான நரம்பியக்கடத்தி ஆகும், இது மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் அது உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவும்.

பிறப்புறுப்பு வறண்டுபோவதை குறைக்க உதவுகிறது

உயவு எனப்படும் லுபிரிகேஷன் அதிகரிக்க சுயஇன்பம் பயன்படுகிறது, குறிப்பாக பெண்களின் பிறப்புறுப்பு வறண்டுபோகாமல் தடுக்க இது அதிக அளவில் உதவும் என்றும் கூறப்படுகிறது. 

சிறந்த தூக்கத்தை தருகின்றது

சுயஇன்பம் மற்றும் உடலுறவு ஆகிய இரண்டின் போதும் வெளிப்படும் உணர்ச்சி, உங்கள் தசைகளை தளர்வடைய செய்கின்றது. மேலும் இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தை அதிகரிக்கிறது, இது தளர்வு உணர்வைத் தூண்டி சிறந்த தூக்கத்தைப் பெற உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

சுயஇன்பம் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க தூண்டுகிறது, இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அது அதிகரிக்கிறது. 

click me!