கழுத்து கருப்பா இருக்கா?.. தயிர் போதுமே.. பளபளன்னு ஜொலிக்க ஈஸி டிப்ஸ்

By Asianet Tamil  |  First Published Jul 14, 2024, 3:53 PM IST

முகம் வெள்ளையாக பளிச் என்று இருந்தாலும் சிலருக்கு பின்னங்கழுத்து கருப்பாக இருக்கும். எத்தனை முறை சோப்பு போட்டு கழுவினாலும் கழுத்து கருமை போகாது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கழுத்து கருமையை போக்க வீட்டிலேயே உள்ள சில பொருட்களை வைத்து நாம் கழுத்து கருமையை போக்கி பளிச்சென்று மாற்றலாம்.


சிம்பிள் பியூட்டி டிப்ஸ்: கழுத்து மட்டுமல்லாது சிலருக்கு கால் மூட்டு, கை மூட்டு, பாதங்கள் கூட கருப்பாக மாறும்.  வைட்டமின் பி 12 பற்றாக்குறை கூட சிலருக்கு கருமையை ஏற்படுத்தும். கருமையை நீக்கி முகம், கை, கால்களை பொலிவாக்க எல்லோராலும் பியூட்டி பார்லர் போக முடியாது எனவே எளிமையான  இந்த டிப்ஸ்களை  உபயோகித்து குறைந்த செலவில் அழகு தேவதைகளாக மாறாலாம்.

தயிர் பேக்: சருமத்திற்கு இளமையையும் அழகையும் தரக்கூடியது தயிர். வீட்டில் எப்போதும் தயிர் தயாராக வைத்திருங்கள். தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், சருமத்தில் உள்ள கருமையை நீக்கும் தன்மை கொண்டது. ஆகவே தினமும் தயிரை முகம் மற்றும் கை, கால்களில் தடவி ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால், முகம் பொலிவாகும்.  ஒரு மாதத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Tap to resize

Latest Videos

கோதுமை மாவு: தயிரில் சிறிது கோதுமை மாவு, மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல கலந்து முகத்திலும் கழுத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் தேய்த்து உலர விடலாம். 10 நிமிடங்கள் நன்றாக தேய்த்து எடுத்து விட்டு இளம் சூடான நீரில் கழுவி வந்தால், கருமை நீங்கத் தொடங்கும். விடுமுறை நாட்களில் தயிருடன் சிறிதளவு சந்தனம், மஞ்சள் தூள் கலந்து கருமை உள்ள பகுதிகளில் பேக் போல நன்றாக பூசி உலர விட்டு கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை இப்ப செய்து வர கழுத்து கருமை சரியாகும்.

தயில் மஞ்சள் தூள் பேக்: 2 ஸ்பூன் கெட்டியான பசுந்தயிரில் கால் ஸ்பூன் மஞ்சள்தூள் கலந்து சிறிதளவு தேன் சேர்த்து நன்றாக குழைத்து பேக் போல் செய்து கை முட்டி கால் முட்டி என கருப்பாக உள்ள  பகுதிகளில் போட்டு காயவிடவும். அரைமணி நேரம் கழித்து காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் கருமை நீங்கும்.

கற்றாழை ஜெல்: அரிசி மாவு, கற்றாழை ஜெல், தயிர் கலந்து கழுத்து கருப்பாக உள்ள பகுதிகளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை இப்படி செய்தால் கருப்பாக உள்ள பகுதிகள் பளிச் என மாறும்.

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காய் சரும பராமரிப்புக்கு ஏற்றது. வெள்ளரிக்காய் தயிரோடு சேர்த்து சாலட் போல செய்து சாப்பிடுவதன் மூலம் சருமம் பொலிவவாகும். வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து அதோடு சிறிதளவு தயிர் சேர்த்து கருப்பாக உள்ள பகுதிகளில் பூசுவதன் மூலம் சருமத்தில் உள்ள  கருமை நீங்குவதோடு, புத்துணர்ச்சியடையும்.

தயிர் தக்காளி பேக்: தக்காளியை அரைத்து அதனுடன் சிறிதளவு தயிர் சேர்த்து பேக் போல போட்டு உலர விட்டு 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் பளிச் என்று மாறும் வாரத்திற்கு இரண்டு முறை இதை முயற்சி செய்யலாம்.

 இனி காபி, டீக்கு பதிலாக தினமும் காலையில் இந்த 5 டிரிங்ஸ்ல ஒன்னு குடிங்க.. ஹெல்தியா இருப்பீங்க..

click me!