Beauty Tips : ஓரே இரவில் முக பரு மறைய  தேங்காய் எண்ணெயுடன் 'இத'  கலந்து முகத்தில் தடவினால் போதும்!

By Kalai Selvi  |  First Published Apr 8, 2024, 9:20 PM IST

முகத்தின் அழகை பராமரிக்க பல வீட்டு வைத்தியங்களை நாம் பயன்படுத்துவோம். அவற்றில் ஒன்றுதான் தேங்காய் எண்ணெய். இது உங்கள் சருமத்தை மென்மையாக்குவது மட்டுமின்றி,
முகப்பருவையும் நீக்கும்.


பொதுவாகவே, பலர் தங்கள் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலரோ சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துகின்றனர். அந்தவகையில், தேங்காய் எண்ணெய் உங்கள் முக அழகை அதிகரிக்கும் தெரியுமா..? இதற்கு தேங்காய் எண்ணெயுடன் ஆமணக்கு எண்ணெய் கலந்து முகத்தில் தடவ வேண்டும். சரி இப்போது இவற்றின் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

Tap to resize

Latest Videos

undefined

சுருக்கங்களை குறைக்கும்: உங்கள் முகத்தில் சுருக்கங்கள் அல்லது நேர்த்தியான கோடுகள் போன்ற வயதான அறிகுறிகள் இருந்தால், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்தலாம். இவை இரண்டும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளன. அவை சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, முகத்தில் இருக்கும் வயதான செயல்முறையை குறைக்கும். மேலும், இது சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

சருமத்தை மென்மையாக்கும்: நீங்கள் இரவில் தூங்கும் முன் இந்த இரண்டு எண்ணெய் கலந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் சருமம் மிருதுவாகும். இவை சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். மேலும் வறண்ட சருமம் உள்ளவர்கள் தினமும் இதை முகத்தில் தடவலாம்.

முகப்பருவை நீக்கும்: ஆமணக்கு எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி வந்தால் பருக்களும் மறையும். ஏனெனில், இவற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை  முகப்பருவை அகற்ற உதவுகிறது. இதனால் முகப்பரு வராமல் தடுக்கப்படுகிறது.

தோல் பதனிடுதலை நீக்கும்: கோடை வெயிலால் முக பொலிவடைந்து காணப்படும். முகத்தில் சன் டேன் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் ஆமணக்கு எண்ணெய் கலந்து, இரவில் முகத்தில் தடவி வந்தால், தோல் பதனிடுதல் குறைக்கிறது. இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மற்றும் ஈரப்பதமூட்டும்.

தோல் அழற்சியைக் குறைக்கும்:  ஆமணக்கு எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி வந்தால்,  தோல் அழற்சி குறையும். ஆமணக்கு எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் முகப்பருவை தடுக்கவும் உதவுகிறது.

தேங்காய் எண்ணெயுடன் ஆமணக்கு எண்ணெயை முகத்தில் தடவுவது எப்படி?
இதற்கு முதலில் நீங்கள், 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சில துளிகள் ஆமணக்கு எண்ணெயை சேர்க்கவும். நீங்கள் விரும்பினால் இதற்கு பதிலாக  பாதாம் எண்ணெயையும் சேர்த்துக்கொள்ளலாம். இதை உங்கள் முகத்தில் தடவி 2 முதல் 3 நிமிடங்கள் மசாஜ் செய்து, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். பின் காலை எப்போதும் போல முகத்தை கழுவுங்கள். நீங்கள் விரும்பினால், அரை மணி நேரம் கழித்து உங்கள் முகத்தையும் கழுவலாம்.

click me!