உஷார்..! கொரோனா இந்த வாரம் உச்சத்தை எட்டும்..! மத்திய அரசின் அடுத்த அதிரடி நடவடிக்கை என்ன?

By ezhil mozhiFirst Published Apr 6, 2020, 2:08 PM IST
Highlights

கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழுவுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ஒரு பக்கமிருக்க டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலம் அதிகமாக நோய்த்தொற்று பரவிவருகிறது. 

உஷார்..! கொரோனா இந்த வாரம் உச்சத்தை எட்டும்..!  மத்திய அரசின் அடுத்த அதிரடி நடவடிக்கை என்ன?  

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் மட்டும் தற்போது 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு ஐந்து நாட்களாகவே தமிழகத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் தமிழகத்தில் மட்டும் குறைந்தபட்சம் 70 (அ ) 80 என தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அப்படிப் பார்த்தால் கடந்த நான்கு நாட்களில் மட்டும் இரு மடங்காக அதிகரித்து உள்ளது என கணிக்கப்பட்டு வருகிறது.

அதன் பிறகு நோய் தாக்கம் மெல்ல மெல்ல குறைய வாய்ப்பு உள்ளது என ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. அப்படிப்பார்த்தால் மே மாதம் ஒன்பதாம் தேதி முதல் படிப்படியாக குறையத் தொடங்கலாம். எனவே இந்த ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் நோய் பரவுதல் பொருத்து அதற்கேற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது அந்த குஸ்க்கு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்த தகவலை கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழுவுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ஒரு பக்கமிருக்க டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலம் அதிகமாக நோய்த்தொற்று பரவிவருகிறது. அதனை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்தும், மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் குறித்தும் தனிமைப் படுத்துவது குறித்தும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த ஒரு நிலையில் சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டு உள்ளது என்றும், இந்த ஒரு காலகட்டத்தில் மிகவும் உஷாராக இருந்து, கட்டுப்பாட்டை நீட் டிக்க வைக்க வேண்டும் என்றும், ஒரு சில இடங்களில் அதிக கட்டுப்பாடு விதித்து நோய்களை கட்டுப்படுத்த தேவையான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த குழு தெரிவித்துள்ளது.

click me!