மனிதர்களை அடுத்து விலங்கை தாக்க தொடங்கிய "கொரோனா"..! முதல் முறையாக "புலி"யை தாக்கியது!

By ezhil mozhiFirst Published Apr 6, 2020, 11:54 AM IST
Highlights

பூங்காவில் பணியாற்றி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து  புலிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யட்டப்பட்டு உள்ளது. மேலும் இதே பூங்காவில் உள்ள மற்ற 6 புலிகள்  மற்றும் சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டு உள்ளதாம்.
 
மனிதர்களை அடுத்து விலங்கை தாக்க தொடங்கிய "கொரோனா"..! முதல் முறையாக "புலி"யை தாக்கியது! 

உலக அளவில் அமரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா. அதன் படி தற்போது வரை  3,36,673 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.கொரோனாவிற்கு எதிராக உலக நாடுகள் பெரும்பாடு  பட்டு வருகிறது. எப்போது தான் இந்த கொரோனாவிற்கு ஓர் முடிவு ஏற்படுமோ என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் இதுவரை மனித இனத்திற்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக விலங்கினதையும் தாக்கும் கொரோனா என்பதை நிரூபணம் செய்து உள்ளது. அதன் படி அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பூங்காவில் பணியாற்றி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து புலிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யட்டப்பட்டு உள்ளது. மேலும் இதே பூங்காவில் உள்ள மற்ற 6 புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டு உள்ளதாம்.

இந்த புலிகளுக்கும் வறட்டு இருமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.பொதுவாக மனித இனத்திற்கு இந்த வைரஸ் தாக்கம் எப்படி உள்ளது என்பதை பார்க்க முடிகிறது. அனால் இது வரை விலங்கினத்தை தாக்காமல் இருந்த வைரஸ் முதன் முறையாக அமெரிக்காவால் உள்ள புலிக்கு வைரஸ் தாக்கம் ஏற்பட்டு உள்ளது. எனவே  விலங்கினத்திற்கு இந்த வைரஸ் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை உற்று நோக்கி வருவதாகவும், தற்போது பாதிக்கப்பட்டு உள்ள புலிகளை உற்று கவனித்து வருவதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

click me!