உருளைக்கிழங்கு சிப்ஸை விட வாழைப்பழ சிப்ஸ் பெஸ்டா? எந்த சிப்ஸ் வாங்கலாம்

Published : Jul 16, 2025, 12:49 PM IST
banana chips vs potato chips

சுருக்கம்

உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் வாழைப்பழ சிப்ஸ் இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தையும், எந்த வகை சிப்ஸ் ஆரோக்கியமானது என்பதையும் இந்த பதிவில் காணலாம்.

சிப்ஸ் என்றாலே பலரது நாவிலும் எச்சில் ஊறும். சிப்ஸ் பலரது விருப்பமான ஸ்னாக்ஸ் ஆகும். அதிலும் குறிப்பாக உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் வாழைப்பழ சிப்ஸ் இரண்டும் பலருக்கும் விருப்பமானது. இவை இரண்டும் சாப்பிடுவதற்கு சுவையாகவும், மொறுமொறுப்பாக இருந்தாலும் இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் மற்றும் எது ஆரோக்கியமானது என்று நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

ஏனெனில் இந்த இரண்டு சிப்ஸ்களின் சுவை, அமைப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கள் வேறுபடுகின்றன. மேலும் இவை இரண்டும் சாப்பிடுவது உண்மையில் ஆரோக்கியமானதா என்று சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா? இது போன்ற பல கேள்விக்கான பதிலை இப்போது இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

வாழைப்பழ சிப்ஸ் :

வாழைப்பழம் சிப்ஸ் கேரளாவில் ரொம்பவே பிரபலமானது இந்த சிப்ஸ் பழுத்த அல்லது பாதி பழுத்த வாழைப்பழத்தில் தயாரிக்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக நேந்திர பழத்தில். இந்த பழத்தை வட்ட வடிவில் மெல்லியதாக நறுக்கி பிறகு தேங்காய் எண்ணெயில் போட்டு வறுக்கப்பட்டு, லேசான உப்பு மற்றும் மசாலா சேர்த்து கலந்து சாப்பிடலாம். இந்த சிப்ஸ் இனிப்பின் சுவையுடன், உப்பின் தனித்துவமான தன்மையுடன் மொறுமொறுப்பாக சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு சிப்ஸ் :

உருளைக்கிழங்கை வட்ட வடிவில் மெல்லியதாக நறுக்கி எண்ணெயில் போட்டு வறுத்து அதனுடன் சிறிதளவு கிளாசிக் உப்பு முதல் காரமான பார்பிக்யூ அல்லது வெங்காயம் மற்றும் புளிப்பு கிரீம் வரை உள்ளிட்ட பல சுவைகளுடன் கலந்து இந்த சிப்ஸ் தயாரிக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து வயதினர் மத்தியிலும் இந்த சிப்ஸ் பிரபலம்.

இரண்டு சிப்ஸ்களின் சுவை, அமைப்பு மற்றும் தயாரிப்பு முறைகள்

வாழைப்பழ சிப்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் இவை இரண்டும் எண்ணெயில் தான் வறுத்தெடுக்கப்படுகிறது. ஆனாலும் அவற்றின் மூலப் பொருட்கள், தயாரிப்பு முறைகள் வெவ்வேறானவை. அந்தவகையில் வாழைப்பழ சிப்ஸ் தேங்காய் எண்ணெயில் வறுக்கப்படுவதால் தனித்துவமான சுவையை கொண்டுள்ளது. மேலும் சற்று இனிப்பு கலந்த சுவையுடன் இருக்கும். அதேசமயம் உருளைக்கிழங்கு சிப்ஸ் நடுநிலையானது மற்றும் அதில் சேர்க்கப்படும் சுவையூட்டும் பொருட்களால் அதன் சுவை வித்தியாசமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு!!

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் உங்களுக்கு வாழைப்பழ சிப்ஸ் பெஸ்ட் சாய்ஸ். ஏனெனில் அவற்றில் இருக்கும் கிளைசெமிக் குறியீடு உருளைக்கிழங்கு சிப்ஸ் விட குறைவாகவே இருக்கும். எனவே, நீங்கள் வாழைப்பழ சிப்ஸ் சாப்பிட்டாலும் உங்களது ரத்த சர்க்கரை விரைவாக அதிகரிக்காது.

சிப்ஸில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்புகள் :

நீங்கள் வறுப்பதற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து நிறைவேற்றுக் கொழுப்பு சேரும். அந்தவகையில் தேங்காய் எண்ணெயில் தயாரிக்கப்படும் வாழைப்பழ சிப்ஸ் பிற தாவர எண்ணெகளை விட நிறைவுற்ற கொழுப்புகளை கொண்டுள்ளன. எனவே இதை மிதமான அளவில் சாப்பிட்டால் உங்களுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. அதுபோல உருளைக்கிழங்கு சிப்ஸ் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் வறுக்கப்படுகிறது. இது இதை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் :

வாழைப்பழத்தில் இயற்கையாகவே இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் நீண்ட நேரம் உங்களது வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். உருளைக்கிழங்கு சிப்ஸ் நார்ச்சத்து குறைவாகவும் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் உள்ளன.

சோடியம் ;

வாழைப்பழ சிப்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் இவை இரண்டிலும் சோடியம் நிறைந்துள்ளன. உடலில் சோடியம் அதிகமானால் உயரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே குறைந்த அளவில் சோடியம் அல்லது குறைவான உப்பு கொண்ட சிப்ஸ் வகைகளை சாப்பிடுவது நல்லது.

வாழைப்பழ சிப்ஸ் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் எது பெஸ்ட்?

நீங்கள் நார்ச்சத்து அதிகமாகவும், கிளைசெமிக் குறியீடு குறைவாகவும், பொட்டாசியம் உள்ள சிப்ஸ் சாப்பிட விரும்பினால் வாழைப்பழம் சிப்ஸ் சாப்பிடுங்கள். ஒருவேளை உங்களுக்கு கிளாசிக் சுவை தான் பிடிக்கும் என்றால் உருளைக்கிழங்கு சிறந்த தேர்வு. ஆனால் அவற்றை மிதமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அதில் இருக்கும் சோடியத்தில் நுகர்வு காரணமாக.

வாழைப்பழ சிப்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் இவை இரண்டையும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதுதான் உங்களது ஆரோக்கியத்திற்கும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க
Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க