பெரியவர்கள் மட்டுமே கனவு காண்பது கிடையாது. சிறு குழந்தைகள் கூட கனவு காணும். அதனால் தான் பிறந்த குழந்தைகள் தூக்கத்தில் மிக அழகாக சிரிக்கும்.
குழந்தை ஏன் தூக்கத்தில் சிரிக்கிறது தெரியுமா..?
பெரியவர்கள் மட்டுமே கனவு காண்பது கிடையாது. சிறு குழந்தைகள் கூட கனவு காணும். அதனால் தான் பிறந்த குழந்தைகள் தூக்கத்தில் மிக அழகாக சிரிக்கும். அதைக் கண்டு பெற்றோர்கள் ஆனந்த கண்ணீர் விடுவார்கள். ரசித்து பார்ப்பார்கள். இவை அனைத்தையும் நம் கண் முன்னே நம் வாழ்க்கையில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.
ஆனால் இது குறித்து பெரியவர்கள் தெரிவிக்கும் போது, குழந்தைகளுக்கு கடவுள் விளையாட்டு காட்டுவார் அதனால்தான்.. தூக்கத்தில் குழந்தை சிரிக்கும் என்பார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? பிறந்த இரண்டு வாரங்கள் முடிந்ததுமே குழந்தைகள் கனவு காணத் தொடங்கும் என்பதே.
அதாவது அன்னையின் அன்பான அரவணைப்பிலேயே இருக்கும் இனிமையான நேரங்கள் குழந்தைகளுக்கு அதிகமாக நினைவூட்டிக் கொண்டே இருக்கும். அதனால் தான் குழந்தைகள் தூங்கும்போது கனவில் அழகிய சிரிப்பு வரும். இதற்கு மாறாக எப்போதும் சண்டை சப்தம் இருந்தால் பயமுறுத்தும் கனவுகள் வரும். அதனால்தான் குழந்தைகள் அழத் தொடங்கும்.
இன்னும் சொல்லப் போனால் 18 மாதங்களுக்கு பிறகு குழந்தைகளின் கற்பனைத் திறன் வேகமாக வளரும். அப்போது சில பயமுறுத்தும் கனவுகளும் வரும். எனவேதான் ஆரம்ப காலகட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் சிறு சிறு விஷயங்களுக்கு கூட குழந்தைகள் பயப்படும். உறக்கத்தில் குழந்தைகளுக்கு கனவு வரும் போது அருகிலிருந்து தட்டி கொடுத்தாலே போதுமானது... நாம் அருகில் தான் உள்ளோம் என்பதையும் குழந்தை உணரும்.