கருவில் உள்ள குழந்தை கைதட்டிய அதிசயம்...! தாயின் பாடலை ரசித்த உன்னதம்...!

 |  First Published Nov 24, 2017, 5:51 PM IST
babe enjoyed to clap by hearing moms special song



கருவில் உள்ள குழந்தை பாடலை கேட்டு கை தட்டி மகிழ்ந்த அதிசய  நிகழ்வு இங்கிலாத்தில் நடைபெற்று உள்ளது 

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜென் கார்டியனல் என்றும் பெண் கர்ப்பமாக இருந்துள்ளார்.இவர் தன் குழந்தைகாக தானே சில பாடல் வரியை பாடி இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

சில நாட்களாகவே அதனை பாடிவந்த அந்த பெண்மணி  நாளடைவில் பாட்டு பாடும் போதெல்லாம் குழந்தையின் அசைவில் ஏதோ ஒன்று மாறுபடுவது போலவே  தெரிந்துள்ளது

இதனை உறுதி செய்யும் பொருட்டு மருத்துவரை அணுகிய கர்ப்பிணி பெண்,டாக்டரின்  அறிவுரை படி மீண்டும் அந்த பாடலை பாடி உள்ளார்

அப்போது, கருவில் உள்ள குழந்தை  தன் தாய் பாடும் அந்த பாடலை ரசிக்கும் பொருட்டு  கைதட்டி  உள்ளது.அதுவும் ஒருமுறை அல்ல ....மூன்று முறை கை தட்டி உள்ளது ...

மீண்டும் அந்த பாடலை பாடவே  திரும்பவும் அந்த குழந்தை கை தட்டி உள்ளது. இதனை கண்ட  மருத்துவர் ஆச்சர்யப்பட்டு இதனை அப்படியே ஸ்கேன் செய்யும் போது பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவை அந்த பெண்ணின் கணவர் விடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார். 

இந்த நிகழ்வு குறித்து, ஜென் கார்டியனலிடம் கேட்டபோது, இது தனக்கு மிகுந்த ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் தந்ததாகக் கூறியிருக்கிறார். ..

தற்போது  இந்த அதிசய உண்மைதான்  சமூகவலைதளங்களில்  வைரலாக பரவி வருகிறது

click me!