“உடனே ATM சீக்ரெட் நம்பர் மாத்துங்க” இல்லனா உங்கள் பணம் கோவிந்தா....கோவிந்தா ...!!!.

First Published Oct 22, 2016, 3:18 AM IST
Highlights


“உடனே ATM சீக்ரெட் நம்பர் மாத்துங்க” இல்லனா உங்கள் பணம் கோவிந்தா....கோவிந்தா ...!!!.

சீனாவிலிருந்து முறையற்ற வழியில் கார்டு எண்கள் பயன் படுத்தப்பட்டு வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுகிற‌து என்ற செய்தி அனைவரையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

.இது தொடர்பாக, ஏடிஎம் சேவைகளை வழங்கும் ஹிடாச்சி பேமென்ட் சர்வீசஸிலி ருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தற்போது  தகவல்  வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள மொத்தம் 32 லட்சம் கார்டுகளின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக  சந்தேகம்  வந்துள்ளது.

இதில் 26 லட்சம் கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள்  என்றும், மீதமுள்ள 6 லட்சம் கார்டுகள் ரூபே கார்டுகள் என்றும்  தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலான கார்டுகள் எஸ்பிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஆக்ஸிஸ் வங்கிகளைச் சேர்ந்தவை என்பது  குறிப்பிடத்தக்கது.

மோசடி  தொடர்பாக எழுந்த  சந்தேகத்தை  அடிப்படையாக வைத்து, எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களின் 6 லட்சம் டெபிட் கார்டுகளை  அதிரடியாக  முடக்கியுள்ளது.  

இந்நிலையில், முடக்கப்பட்ட  கார்டுகளுக்கு  பதிலாக , புதிய  கார்டுகளை  , எந்த வித கட்டணமும் இன்றி வாடிகையாளர்களுக்கு  வழங்க   உள்ளதாக எஸ்பியை  தெரிவித்துள்ளது.

மேலும், ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, யெஸ் வங்கி ஆகிய வங்கிகளும் வாடிக் கையாளர்கள் தங்களது டெபிட் கார்டு ரகசிய எண்ணை மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்தி யுள்ளது.அதுமட்டுமின்றி இன்னும் சிறிது காலத்திற்கு,  தங்களது வங்கி ஏடிஎம் மையத்தை தவிர வேறு எந்த வங்கி ஏடிஎம் மையத்திலும் பணம் எடுக்க வேண்டாம் என ஹெச்டிஎப்சி வங்கி கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

click me!