நாளை முதல் திருப்பதி வெங்கடாச்சலம் போல் நிற்பார் அத்திவரதர்..! இன்றுடன் நிறைவுபெற்றது சயனகோலம்...!

Published : Jul 31, 2019, 05:50 PM ISTUpdated : Jul 31, 2019, 05:55 PM IST
நாளை முதல் திருப்பதி வெங்கடாச்சலம் போல் நிற்பார் அத்திவரதர்..!  இன்றுடன் நிறைவுபெற்றது சயனகோலம்...!

சுருக்கம்

இன்றுடன் அதிரவரதரின் சயன கோல தரிசனம் நிறைவு பெற்று, நாளை முதல் நின்ற கோலத்தில்  பக்தர்களுக்கு காட்சி அளிக்க  உள்ளார். இதன் காரணமாக  பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்றுடன் அத்தி வரதரின் சயன கோல தரிசனம் நிறைவு பெறுகிறது. நாளை முதல் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் அத்திவரதர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிக அற்புதமான நிகழ்வான அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கியது. முதல் 24 நாளில் சயன கோலத்திலும், அடுத்து வரும் 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சி கொடுப்பது வழக்கம்

இதற்கு முன்னதாக 1979 ஆம் ஆண்டு அத்தி வரதர் வைபவம் நடைபெற்றது. அதன் பின்னர் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தொடங்கியுள்ள அத்தி வரதர் வைபவத்தை காண தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

இந்த முறை ஜூலை 1 முதல் 31 ஆம் தேதியான இன்று வரை சயன கோலத்தில் அத்திவரதர் காட்சி கொடுத்தார். நாளை முதல் நின்ற கோலத்தில் திருப்பதி வெங்கடாச்சலம் போல் காட்சி அளிக்க உள்ளார். இதன் காரணமாக இன்று மாலை 5 மணியுடன் தரிசனம் முடித்து வைக்கப்பட்டது.

சயன கோலத்தில் அத்தி அவரதரை தரிசனம் செய்வதை  காட்டிலும், நின்ற  கோலத்தில் அத்தி வரதரை காணவே பக்தர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால், பக்தர்களின் கூட்டம் நாளை முதல் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்