இரவு தூக்கம் இல்லையா..? உங்களுக்கு விரைவில் இப்படி ஒரு பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம்..!

By ezhil mozhiFirst Published Jan 30, 2019, 4:29 PM IST
Highlights

நல்ல உறக்கம் என்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். காரணம் நாம் வாழும் இந்த இயந்திர வாழ்க்கையில் ஓடோடி கொண்டிருக்கின்றோம். 

இரவு தூக்கம் இல்லையா..? உங்களுக்கு விரைவில் இப்படி ஒரு பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம்..! 

நல்ல உறக்கம் என்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். காரணம் நாம் வாழும் இந்த இயந்திர வாழ்க்கையில் ஓடோடி கொண்டிருக்கின்றோம். எந்த நேரத்திலும் எந்த நேரத்தில் வேலை செய்கிறோம். எந்த நேரத்தில் உணவு அருந்துகிறோம் என எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் எப்போதும் வேலையைப் பற்றியும் மற்ற பிற விஷயங்களை பற்றி நமக்கு பெரும் கவலையாக உள்ளது.

ஆனால்.. இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு பணியில் இருக்கும் நபர்கள் மிக அதிகமாக இதய நோய், நரம்புத் தளர்ச்சி மற்றும் புற்றுநோய்க்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளது என ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள இந்த கருத்து கணிப்பு அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. அதாவது இரவு முழுக்க பணியில் இருக்கும்போது உறக்கம் இல்லாமல் இருந்தால்  நம் உடலில் உள்ள DNA சிதைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது. இவ்வாறு DNA சிதையும் போது, நம் உடல் உறுப்புகள் மட்டுமின்றி குறிப்பாக இதய நோய், புற்று நோய், நரம்பு மண்டலம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் வரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

எனவே முடிந்த அளவு எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ அந்த நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. 

click me!