எண் 5 - ல் ஒளிந்திருக்கும் இத்தனை அம்சங்களா?

By manimegalai aFirst Published Dec 4, 2018, 1:47 PM IST
Highlights

பொதுவாக சிலருக்கு சில எண்கள் ராசியான எண்கள் என்று கூறப்படும். எண் கணித ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தாங்கள் வாங்கும் வாகனத்தில் கண்டிப்பாக குறிப்பிட்ட எண் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

பொதுவாக சிலருக்கு சில எண்கள் ராசியான எண்கள் என்று கூறப்படும். எண் கணித ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தாங்கள் வாங்கும் வாகனத்தில் கண்டிப்பாக குறிப்பிட்ட எண் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

அந்த வகையில் எண் 5 மிகவும் உயரியதாக கருதப்படுகிறது.

ஐந்தாக அமைந்தவை பற்றி இப்போது பார்க்கலாம்.

பஞ்ச கன்னியர்: அகலிகை, சீதை, தாரை, திரவுபதி, மண்டோதரி.

பஞ்சவாசகம்: லவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.

பஞ்சாமிர்தம் : சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.

பஞ்சபாண்டவர்கள்: தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன், 

பஞ்சசீலம்: கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.

பஞ்சபட்சி: வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.

பஞ்சாஷரபுராணம்: தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.

பஞ்சரத்தினங்கள்: வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம். 

பஞ்சவர்ணம்: வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

பஞ்சசாங்கம்: கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.

பஞ்சமூலம்: செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.

பஞ்சபாதகம்: போய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.

பஞ்சபாணம்: முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.

பஞ்சாயுதம்: சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.

பஞ்சபரமோட்டி: அருகர், சித்தர், உபாதித்தியாயர், ஆசிரியர், சாதுக்கள்.

பஞ்சசிகை: தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.

பஞ்சதேவர்:  பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.

பஞ்சஸ்தலம்: காசி, சோம்நாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.

பஞ்ச பூதங்கள்: நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்.

click me!