அமுல் நிறுவனம் அறிமுகப்படுத்தும் சர்க்கரை நோயாளிகளுக்கான ஸ்பெஷல் பால்…. என்ன தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Jan 26, 2019, 8:07 PM IST
Highlights

சர்க்கரை நோயாளிகள் பயன்பெறும் வகையில் அமுல் நிறுவனம் ஒட்டகப் பாலை அறிமுகம் செய்துள்ளது. ஒரு லிட்டர் ஒட்டகப் பாலில் 52 யூனிட் அளவுக்கு இன்சுலின் இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

பிரபல அமுல் பால் நிறுவனம் முதன்முறையாக 500 மில்லி லிட்டர் பெட் பாட்டில்களில் ஒட்டகப் பாலை அறிமுகம் செய்திருக்கிறது. இதற்காக குஜராத் மாநிலம் காந்திநகர், அகமதாபாத், கட்ச் பகுதிகளில் இருந்து ஒட்டகப் பால் பெறப்படுவதாக அமுல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

500 மில்லி லிட்டர் பெட் பாட்டிலின் விலை ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் பால் 3 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த உகந்ததாக இருக்கும் என்பதால் இதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்துவது அவசியம்.

ஒட்டகப் பால் அறிமுகம் குறித்து அமுல் நிறுவனம், "சில நாட்களுக்கு முன்னதாக, ஒட்டகப் பால் சாக்லேட் அறிமுகம் செய்தோம். அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே ஒட்டகப் பாலையும் அறிமுகம் செய்தோம்.

மேலும் ஒட்டகப் பாலில் இன்சுலினுக்கு இணையான புரதம் இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை செய்யும்" எனத் தெரிவித்திருக்கிறது. ஒரு லிட்டர் ஒட்டகப் பாலில் 52 யூனிட் அளவுக்கு இன்சுலின் இருப்பதால் சர்க்கரை நோயை இந்த ஒட்டகப் பால் கட்டுப்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.

click me!