Sukku Malli Coffee Health Benefits : தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சுக்கு காபியை குடிப்பதால், கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இப்போது இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் காபி பிரியரா? ஒரு கப் காப்பி உடன் தினமும் உங்கள் நாளை தொடங்குகிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம், நீங்கள் எப்போதும் பால் காபி தான் குடிக்கிறீர்கள் என்றால், அப்படியானால், ஒரு நாள் சற்று வித்தியாசமாக சுக்கு காபி குடித்துப் பாருங்கள். இது காலை முதல் மாலை வரை ஏற்படும் சோர்வை நீக்க முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக, இது தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான மூலிகை பானமாகும்.
ஏலக்காய், மிளகு, கொத்தமல்லி மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான காபி, நல்ல சுவையுடனும், பல வழிகளில் ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை வழங்குகிறது. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான இந்த சுக்கு காபியை குடிப்பதால், கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இப்போது இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: காபி குடிப்பது நல்லது தான்... ஆனால் அதை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் தெரியுமா?
சுக்கு காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இவையே...
1. மாதவிடாய் சமயங்களில்...
சுக்கு காப்பியில் சேர்க்கப்படும் கொத்தமல்லி மாதவிடாய் சுழற்சியை மட்டுமின்றி, ஹார்மோன்களின் சமநிலையையும் தடுக்கிறது. இந்த காபியில் பயன்படுத்தப்படும் இஞ்சி அலர்ஜி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரண பண்புகள் இருப்பதால், அது மாதவிடாய் வழியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
2. செரிமானத்திற்கு உதவும்...
சுக்கு காபி வயிற்றுவலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, சளி அல்லது தொண்டைப்புண் போன்ற செரிமான பிரச்சனைகளை குணப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. இஞ்சி மற்றும் கொத்தமல்லியுடன் கூடிய சுக்கு காபி குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் மற்றும் குமட்டலுக்கு சிறந்தது.
3. உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு நல்லது...
உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காபி குடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பல மசாலா பொருட்களால் தயாரிக்கப்பட்ட இந்த சுக்கு காபி ஆரோக்கியமானது என்பதால், உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இதை தாராளமாக குடிக்கலாம். இது ரத்தத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் இரத்த உறைவு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.
4. இரத்த சோகைக்கு நல்லது...
உங்கள் வீட்டில் யாருக்காவது இரத்த சோகப் பிரச்சினை இருந்தால், அவர்களுக்கு சுக்கு காபி போட்டு குடியுங்கள். அது அவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், சுக்கு காபி இரும்புச்சத்து நிறைந்த பனை வெல்லத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ரத்தசோகை அபாயத்தை முற்றிலும் குறைக்கும்.
5. சளி இருமலுக்கு நல்லது..
முக்கியமாக இந்த காபியை மழைக்காலங்களில் போட்டு குடித்தால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
இதையும் படிங்க: டீ, காபியுடன் இந்த மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்!!
சுக்கு காபி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
சுக்கு பொடி - கால் கப்
கொத்தமல்லி விதைகள் - அரை கப்
மிளகு - கால் கப்பில் பாதியளவு
ஏலக்காய் - 15
சுக்கு காபி பொடி தயாரிக்கும் முறை :
முதலில் சுக்கை ஒரு உரலில் நன்கு போட்டு இடிக்கவும். பிறகு அதனுடன் கொத்தமல்லி விதைகள், மிளகு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றி இடிக்கவும். கொரகொரப்பாக இருக்க வேண்டும். இதில் ஈரம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் பின் இதை ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு, குறைந்தது ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம் கெட்டுப் போகாது.
சுக்கு காபி செய்முறை :
தேவையான பொருட்கள் :
சுக்கு பொடி - 1 ஸ்பூன்
தண்ணீர் - 2 கிளாஸ்
நாட்டு சர்க்கரை (அ) கருப்பட்டி - தேவையான அளவு
செய்முறை :
சுக்கு காபி செய்ய முதலில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் அதில் சுக்கு பொடி சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் சிறிதளவு வற்றியதும் அதில் இனிப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும், பிறகு அதை இறக்கி வடிகட்டி குடிக்கவும். அவ்வளவுதான் சுவையான சுக்கு காபி தயார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D