Clove Water Benefits : கிராம்பு தண்ணீரால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கிராம்பு பெரும்பாலான இந்திய வீடுகளில் சமையலறையில் பயன்படுத்தப்படுகிறது. சிலர் அதை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலரோ அதில் டீ தயாரித்து கொடுக்கிறார்கள். உங்களுக்கு தெரியுமா கிராமத்தில் கஷாயம் செய்து குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் நீங்கள் விரும்பினால் கிராம்பு தண்ணீரையும் குடிக்கலாம். கிராம்புகளில் வைட்டமின் சி, ஈ, கே, பொட்டாசியம், நார்ச்சத்து, ஒமெகா 3 போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதுதவிர இதில், ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளது. எனவே, கிராம்பு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
கிராம்பு தண்ணீர் குடிப்பதால் நன்மைகள்:
1. தலைவலியை குணமாக்கும்:
மன அழுத்தம் அல்லது தூக்கினுள் காரணமாக தலைவலி ஏற்பட்டால் கிராம்பு தண்ணீரை குடியுங்கள். அதுபோல, அடிக்கடி தலைவலி இருப்பவர்கள் கிராம்பு நீரை குடிக்கலாம்.
2. செரிமானத்தை மேம்படுத்தும்:
வாயு, அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்கள் என்றால், கிராம்பு நீர் குடியுங்கள். மேலும், நீங்கள் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட கிராம்பு நீரை குடியுங்கள்.
3. சருமத்திற்கு நல்லது:
முகப்பரு, உடலில் அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் கிராம்பு தண்ணீரை பிரச்சனை உள்ள இடத்தில் தடவினால் விரைவில் நல் தீர்வு கிடைக்கும். அதுபோல கிராம்பு தண்ணீரை குடித்தால் தோல் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் குணமாகும், வயதான அறிகுறிகளும் குறையும்.
இதையும் படிங்க: Toothache : பல் வலிக்கு சிறந்த தீர்வு இந்த எண்ணெய் தான்.. வீட்டிலேயே செய்யலாம்!
4. தலை முடிக்கு நல்லது:
கிராம்பு நீர் தலைமுடிக்கு பயன்படுத்தினால் முடி உதிர்வு தடுக்கப்படும், வளர்ச்சி அதிகரிக்கும், மேலும் முடி பளபளப்பாக மாறும். அதுபோல இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை தடுக்க உதவுகிறது.
5. இரத்துசர்க்கரை அளவே கட்டுக்குள் வைக்கும்:
உங்களுக்கு ரத்த சர்க்கரை நோய் இருந்தால், கிராம்பு நீரை குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கற்றுக் கொள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
6. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
கிராம்பு நீர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மழைக்காலங்களில் கிராம்பு நீர் குடித்து வந்தால் வைரஸ் தொற்றுகளில் இருந்து காக்கும். இது தவிர சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வருவதும் தடுக்கப்படும்.
இதையும் படிங்க: clove for weight loss : உடல் எடையை வேகமாக குறைக்க கிராம்புவை இப்படி எடுத்துக்கோங்க!
பிற நன்மைகள்:
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D