புலியை ஏன் தேசிய விலங்காக அறிவித்தனர்? சுவாரஸ்யமான உண்மைகள் இதோ!

By Kalai Selvi  |  First Published Jul 29, 2024, 12:31 PM IST

Tiger Is National Animal Of India : இந்தியாவின் தேசிய விலங்காக புலி ஏன் தேர்ந்தெடுக்க பட்டது என்பதை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.


இந்தியாவின் தேசிய சின்னங்கள் அடையாளமும், அடித்தளமும் ஆகும். எல்லா சின்னங்களுக்கும் தனித்தனி சிறப்புகளும், முக்கியத்துவம் உண்டு. தேசிய மலர், பறவை, விலங்கு, பாடல் அகவை நாட்டின் கண்ணியத்தை காட்டும் சின்னங்களின் வகையில் வருகின்றன. அதேபோல் தேசிய விலங்கு புலியும் இதில் அடங்கும். 1973 ஆம் ஆண்டு புலி தேசிய விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஒவ்வொரு தேசிய சின்னத்தையும் தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். அதேபோல் புலியை தேசிய விலங்காக தேர்வு செய்ததற்கு பல காரணங்கள் இருந்தன. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், புலியின் சுறுசுறுப்பு, மகத்தான சக்தி மற்றும் விடாமுயற்சி புலி தேசிய விலங்காக தேர்வு செய்யப்பட்டது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: 'ஆலமரம்" ஏன் தேசிய மரம் தெரியுமா? சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே..

புலிக்கு முன் சிங்கம்:
உங்களுக்கு தெரியுமா? இந்தியாவின் தேசிய விலங்காக புலிக்கு முன் சிங்கம்தான் இருந்தது. இதை கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. 1969 ஆம் ஆண்டு வனவிலங்கு வாரியம் சிங்கத்தை தேசிய விலங்காக அறிவித்தது. ஆனால், 1973 ஆம் ஆண்டு சிங்கத்திற்கு தேசிய விலங்கு அந்தஸ்து நீக்கப்பட்டு, புலி தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:  பொள்ளாச்சி அருகே காட்டெருமையை ஆக்ரோஷமாக துரத்திய புலி; இணையத்தில் வைரலாகும் வீடியோ

புலி ஏன் தேசிய விலங்கு?
சிங்கத்துக்கு பதிலாக புலியை ஏன் தேசிய விலங்காக தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வி இப்போது உங்கள் மனதில் எழலாம்ம் உண்மையில், ஒரு காலம் வரை ஜார்கண்ட், டெல்லி, ஹரியானா போன்ற இடங்களில் புலிகள் அதிக அளவில் காணப்பட்டது. ஆனால், அவற்றின் எண்ணிக்கை படிப்படியாகத் குறைய தொடங்கியது. எனவே, புலியை அழிவிலிருர்ந்து காப்பாற்ற தேசிய விலங்காக தேர்வு செய்யப்பட்டது.

புலி தேசிய விலங்காக அறிவிக்கப்பட்ட ஆண்டில் புலிகளின் எண்ணிக்கை மொத்தம் 9 மட்டுமே. இதனால் தான் புள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை தடுக்க 1979 ஆம் ஆண்டு முதல் 'Project Tiger ' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி அழிந்து வரும் புலிகளை அரசு பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட தொடங்கியது. உங்களுக்கு தெரியுமா.. புலி இந்தியாவிற்கு மட்டுமல்ல வங்காளதேசம், தென்கொரியா, வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் தேசிய விலங்கு. அதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் கீழ், தற்போது இந்தியாவில் 53 புள்ளிகள் காப்பகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!