சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...

 
Published : Jul 06, 2017, 07:44 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...

சுருக்கம்

always smile... non stop smile...

நம்மால் வெளியிடப்படும் ‘சிரிப்பு’ என்ற செயலுக்கு ஈடாக  உலகில் எதுவும் இருக்க முடியாது. பல கோடி மதிப்புள்ள உடைகளையும் அணிகலன்களையும் அணிந்து கொண்டு, சிரிக்க வேண்டிய இடத்தில சிரிக்காமல், முகத்தை ஏழுக்கோனத்திற்கு கேவலமாக  வைத்துக்கொண்டால் பார்க்கவே சகிக்காது.

நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் எண்ணங்களையும் ஆற்றலையும் கூட நேர்மறையானதாக மாற்றியமைக்க இந்த சிரிப்பு உதவுகிறது.  

‘சிரிப்பு சிகிச்சை’ என்று கூட தொடங்கப்பட்டுவிட்ட நிலையை பெற்றுள்ளது சிரிப்பு. பல ஹார்மோன்களின் சுரப்பை சீராக்கும் திறன் சிரிப்புக்குள்ளது. முக அழகை வசீகரமாக்கி சுமாராக இருப்பவர்களைக் கூட மிகவும் அழகுடையவர்களாக காட்டுகிறது.

மகிழ்ச்சி நம்மை தேடி வரும் என்று நின்று கொண்டு இருக்காமல், அத்தகைய சூழலை நாம்  ஏற்படுத்த பழகிக் கொள்ள  வேண்டும். குழந்தைகளின் சிரிப்பு சத்தமும் அவர்களுடைய குறு குறு பார்வையும்,செல்லப் பிராணிகளின் சேட்டையும், நம்மை அறியாமலே புன்சிரிப்பை வரவைத்து விடும்.

உலகிலேயே மிகவும் கடினமாகக் உணரப்படும் விஷயமாக கருதப்படுவது மற்றவர்களை சிரிக்க வைப்பதுதான். “வாய் விட்டு சிரி, நோய் விட்டுப் போகும்” என்ற பழமொழி ஏதோ வாய்ப்போக்கில் சொன்ன ஒரு வாக்கியம் இல்லை. சிரிப்பின் மதிப்பை அறிந்து, உணர்ந்து, புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இதை கூறி இருக்க முடியும். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்