கொரோனா அச்சம்..! அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு..!

By ezhil mozhiFirst Published Mar 13, 2020, 4:20 PM IST
Highlights

இந்த ஒரு நிலையில் மீண்டும் கொரோனா மற்றவர்களுக்கு பரவ கூடாது என்பதற்காக பல்வேறு மாநிலங்களில் வரும் 31 ஆம் தேதி வரை பள்ளி கலோரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது 

கொரோனா அச்சம்..! அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு..! எது இயங்கும் ? எது இயங்காது ..? 

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது . 

இந்த ஒரு நிலையில் தற்போது  இந்தியாவில் 73 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அதில் 4 பேர் வரை சிகிச்சை மூலம் குணமடைந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

இந்த ஒரு நிலையில் மீண்டும் கொரோனா மற்றவர்களுக்கு பரவ கூடாது என்பதற்காக பல்வேறு மாநிலங்களில் வரும் 31 ஆம் தேதி வரை பள்ளி கலோரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு  உள்ளது 

அதன் படி, 

கொரோனா தாக்கம் : கேரள மாநிலம் மூணாறில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

கேரள மாநிலம் மூணாறில் மாட்டுப்பட்டி, குண்டளை, எக்கோ பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல விடுதிகள் மூடப்பட்டு, அந்த இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

நெல்லை நெல்லையப்பர் கோயிலில், பொதுமக்கள் தொடும் தூரத்தில் உள்ள சிற்பங்கள், உண்டியல்கள், சன்னதிகள் என பல்வேறு இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன. 

மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

சென்னை தலைமைச்செயலகம் வளாகம் முழுவதும் கொரோனா தொற்று நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது

சென்னை தலைமைச்செயலகம் வளாகம் முழுவதும் கொரோனா தொற்று நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது. 

கொரோனா பாதிப்பு குறித்த சட்டப்பேரவையில் எழுந்த காரசார விவாதத்தின் போது, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, சுகாதாரத்துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்ரல் 15ம் தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல். மார்ச் 29ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவிருந்த நிலையில் ஒத்திவைப்பு என தகவல் வெளியாகியுள்ளது. 

உத்திரகாண்டில் மார்ச் 31 வரை அனைத்து பள்ளிகளையும் மூட முதலமைச்சர் திரிவேந்திரா சிங் ராவத் உத்தரவிட்டுள்ளார். 

கர்நாடக மாநிலம் கல்புர்கியில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடல். வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கல்புர்கியில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. 

கல்புர்கியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்ததால் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் திரையரங்குகளை மார்ச் 31 வரை மூட மாநில அரசு உத்தரவு

ஒடிசாவில் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை உள்ளாட்சி மன்றங்கள் ஒழுங்குபடுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. அவசியமற்ற அரசு மாநாடுகள் மற்றும் பயிற்சி பட்டறைகளையும் ரத்து செய்து முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

இதே போன்று கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மக்கள் கூடும் கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் திருமண நிகழ்ச்சியை ஒருவாரம் ஒத்தி வைக்க வேண்டும் என கர்நாடக அரசு தெரிவித்து உள்ளார்.

click me!