அலெர்ட் மெசேஜ் மக்களே..!

By ezhil mozhiFirst Published Mar 13, 2019, 3:34 PM IST
Highlights

அடுத்து வரும் இரண்டு நாட்களு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அடுத்து வரும் இரண்டு நாட்களு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

தமிழகத்தில் அதிக பட்சமாக  இன்று  தருமபுரி மாற்றும் சேலத்தில் 39 டிகிரி செல்சியஸும், திருத்தணியில் 38.3 டிகிரி செல்சியஸும், வேலூரில் 37.1 டிகிரி செல்சியஸும் வெப்பம் பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது. மேலும் சென்னையில் அதிக பட்சமாக 35  டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துகொள்ள மக்கள் பயணம் செய்தும் பொது கண்டிப்பாக கையில் ஒரு குடையாவது வைத்துக்கொள்ளுங்கள்..மறக்காமல் தண்ணீர் ஒரு பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உணவு முறைகளிலும் உடலுக்கு குளிர்ச்சியானவற்றை  எடுத்துக்கொள்ளுங்கள்.  

click me!