உஷார்...! செல்போனில் ஆபாச படம் இருந்தாலே கைது..! ஏடிஜிபி. ரவி வைத்த அடுத்த ஆப்பு..!

thenmozhi g   | Asianet News
Published : Mar 14, 2020, 06:38 PM ISTUpdated : Mar 14, 2020, 06:40 PM IST
உஷார்...! செல்போனில் ஆபாச படம் இருந்தாலே கைது..!  ஏடிஜிபி. ரவி வைத்த அடுத்த ஆப்பு..!

சுருக்கம்

அடுத்த அதிர்ச்சி தகவலாக ஆபாச இணையதளங்களுக்கு தடை விதித்தும், ஆபாச படம் பார்ப்பவர்களை கண்காணிக்கப்படும் என தெரிவித்த பின்னரும் இன்றளவும் சிறார் ஆபாச படங்களை பார்ப்பதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது.

ஏடிஜிபி ரவி வைத்த அடுத்த ஆப்பு..!  மொபைல் போனில் ஆபாச படம் இருந்தாலே... பாய்கிறது போக்சோ சட்டம்..! 

ஆபாசப்படங்களை பார்ப்பதும் அதனை சமூக வலைதளங்களில் பரப்புவதும்  குற்றம் என்பதால்   ஏடிஜிபி ரவி பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து அதன் மூலம் இதுவரை 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது

இந்த ஒரு நிலையில், அடுத்த அதிர்ச்சி தகவலாக ஆபாச இணையதளங்களுக்கு தடை விதித்தும், ஆபாச படம் பார்ப்பவர்களை கண்காணிக்கப்படும் என தெரிவித்த பின்னரும் இன்றளவும் சிறார் ஆபாச படங்களை பார்ப்பதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் அடுத்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார் ஏடிஜிபி ரவி. அதாவது குழந்தைகளின் ஆபாச படங்களை செல்போனில் வைத்து இருந்தாலும் அவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என்றும், தற்போது போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே செல்போன் பயன்படுத்துபவர்கள் ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தாலும் மிகவும் தவறான ஒன்று. குறிப்பாக  குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்து இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு சிறை தண்டனை தான் என்றும் தெரிவித்து உள்ளார்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்