அழகை பராமரிக்க இதுதான் ஒரே வழி.. வைரலாகும் ராஷ்மிகாவின் பதிவு!

Published : Jan 11, 2024, 07:41 PM ISTUpdated : Jan 12, 2024, 10:47 AM IST
அழகை பராமரிக்க இதுதான் ஒரே வழி.. வைரலாகும் ராஷ்மிகாவின் பதிவு!

சுருக்கம்

நடிகை ராஷ்மிகா தனது அழகு பராமரிப்பு குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.

குறுகிய காலத்தில் ஸ்டார் ஹீரோயின் அந்தஸ்தைப் பெற்ற கதாநாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட இண்டஸ்ட்ரியில் இருந்து வந்த ராஷ்மிகா தெலுங்கில் டாப் ஹீரோயினாகிவிட்டார்.  2016 இல் இவர், க்ரிக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். அதன்பிறகு 2018 இல் இவர் சலோ திரைப்படத்தின் மூலம் வெற்றியைப் பெற்றார். பின்னர் விஜய் தேவர் கொண்டவுடன் "கீதா கோவிந்தம்" மூலம் அதிக புகழ்பெற்றார். 

அதுமட்டுமின்றி இவர், தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் மற்றும் தமிழில் விஜய் போன்ற நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்தார். இவர் நடித்த புஷ்பா 1 திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா நட்சத்திரமானார். சுகுமார் இயக்கிய இப்படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ராஷ்மிகா ரசிகர்களால் 'நேஷனல் கிரஷ்' என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.

இதையும் படிங்க: இதுக்குமேல மறைக்க முடியாது... திருமண அறிவிப்பை வெளியிட தயாராகும் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா?

திரைப்படங்கள் மற்றுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ராஷ்மிகா ஆக்டிவாக உள்ளார் .மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு பிரத்தியேக ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உள்ளது. சமீபத்தில் முகமூடி அணிந்து தனதுinstagram பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். ஷூட்டிங் வேலைகளில் பிஸியாக இருந்தாலும் தன் அழகை எப்படி பராமரிக்கிறார் என்று அந்தப் பதிவு மூலம் கூறியுள்ளார். அந்தப் பதிவை பலரும் ஷேர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொருவரும் வேலையில் பிஸியாக இருக்கும்போது, நேரமில்லாமல், குறைந்தபட்சம் தூக்கம் கூட இல்லாமல், அதிகமாக பயணம் செய்வதால் சருமம் சேதமடைகிறது என்று ராஷ்மிகா கூறியுள்ளார். சில சமயங்களில் இது போன்ற பிரச்சனை ஏற்படும் போது தோல் மருத்துவரிடம் செல்லக்கூட நேரம் இருக்காது. அப்படியானால் அழகு முகமூடிகளை பயன்படுத்துவது தான் சரியான வழி என்றார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தென்னிந்தியாவில் பிரபலமான ராஷ்மிகா நடிகர் அமிதாபச்சனுக்கு ஜோடியாக 'குட்பை' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் சமீபத்தில் சந்திப் ரெட்டி வங்கா இயக்கிய 'அனிமல்' படத்தில் நடிகர் ரன்பீர் கபூரின் மனைவியாக நடித்தார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. உலகம் முழுவதும் இப்படம் 90 கோடிக்கு மேல் வசூலித்ததாக பட குழு கூறுகிறது. தற்போது இவர் புஷ்பா 2 படத்தில் பிஸியாக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

படையெடுக்கும் கொசுக்களை விரட்டும் அற்புத செடிகள்
வீட்டுக்குள் அமைதியை கொண்டு வரும் செடிகள்