அந்த நிகழ்வுக்கு பிறகு தான் "நான் நடிக்கவே கற்றுக்கொண்டேன்"... வடிவேலு சொன்ன அந்த முக்கிய விஷயம்..!

Published : Nov 18, 2019, 06:35 PM IST
அந்த நிகழ்வுக்கு பிறகு தான் "நான்  நடிக்கவே கற்றுக்கொண்டேன்"... வடிவேலு சொன்ன அந்த முக்கிய  விஷயம்..!

சுருக்கம்

என்னை தனியாக அழைத்து நீ நல்லாவே மதுரை தமிழ் பேசுகிறாய் என பாராட்டி ஒரு முத்தம் கொடுத்தார். அதற்கு பிறகுதான் நடிப்பு என்றால் என்ன இன்னும் எப்படி எல்லாம் அடிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளத் தொடங்கினேன் என தெரிவித்து இருந்தார்.

அந்த நிகழ்வுக்கு பிறகு தான் "நான்  நடிக்கவே கற்றுக்கொண்டேன்"... வடிவேலு சொன்ன அந்த முக்கிய விஷயம்..! 

நடிகர் கமலின் அறுபதாவது ஆண்டு சினிமா பயணத்தை சிறப்பிக்கும் பொருட்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் "உங்கள் நான்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் இளையராஜா ரஜினி விஜய் சேதுபதி வடிவேலு என முக்கிய பல நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகர் வடிவேலு, மேடை ஏறும் போது கூட்டத்தில் இருந்த அனைவரும் ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர். பின்னர் மேடை ஏறிய பின் வடிவேலு பேசிய உரை அனைவரையும் நெகிழ வைத்தது, அப்போது, "60 வருட சினிமா பயணத்தில் எத்தனையோ விஷயங்களை பார்த்து இருப்பார் கமல்; அவருக்கு எத்தனையோ ஏவுகணைகள் பறந்து வந்திருக்கும்; அவருக்கு எத்தனையோ  பாம் வச்சிருப்பாங்க... இவை அனைத்தையும் தாண்டி இன்றும் இந்த இடத்தில் இருக்க முடிகிறது என்றால் அது அவ்வளவு ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை; தேவர்மகன் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்தார் கமல்....
நாளை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விடு என்ன சொல்லி இருந்தார்; ஆனால் நான் அன்று மாலையே அவருடைய அலுவலகத்துக்கு சென்று விட்டேன்; தேவர் மகன் படப்பிடிப்பு நடந்தபோது நடிகர் சிவாஜி இறந்து கிடக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும்; அப்போது நான் கமலை விட அதிகமாக அழுது கொண்டிருந்தேன்; திடீரென என்னுடைய அழுகையை கேட்ட அவர்கள் எழுந்து நீ ஏன்டா இப்படி அழுகுற? போய் தள்ளி உட்காரு... என சொன்னார். 

அதன் பிறகு என்னை தனியாக அழைத்து நீ நல்லாவே மதுரை தமிழ் பேசுகிறாய் என பாராட்டி ஒரு முத்தம் கொடுத்தார். அதற்கு பிறகுதான் நடிப்பு என்றால் என்ன இன்னும் எப்படி எல்லாம் அடிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளத் தொடங்கினேன் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவருடைய நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகாத நிலையில், நடிப்பை விட்டு சற்றுத் தள்ளியிருந்த ஒரு தருணத்தில் தற்போது கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாக இருக்கும் "தலைவன் இருக்கிறான்" என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த பேச்சு பெரும் வியப்பில் ஆழ்த்தியதோடு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்