விருது வாங்க மேலாடை இல்லாமல் வந்த பிரபல நட்சத்திரம்..! பிறகு என்ன நடந்தது நீங்களே பாருங்கள்..!

Published : Nov 18, 2019, 05:01 PM IST
விருது வாங்க மேலாடை இல்லாமல் வந்த பிரபல நட்சத்திரம்..! பிறகு என்ன நடந்தது நீங்களே பாருங்கள்..!

சுருக்கம்

சிலி நாட்டை சேர்ந்த 36 வயதான பிரபல பாப் பாடகி மோன் லாபர்டேவும் கலந்துகொண்டார். 

விருது வாங்க மேலாடை இல்லாமல் வந்த பிரபல நட்சத்திரம்..! பிறகு என்ன நடந்தது நீங்களே பாருங்கள்..! 

விருது வழங்கும் விழா ஒன்றிற்கு வந்த பிரபல பாப் பாடகி மேலாடை இல்லாமல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு முக்கிய புள்ளிகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக சிலி நாட்டை சேர்ந்த 36 வயதான பிரபல பாப் பாடகி மோன் லாபர்டேவும் கலந்துகொண்டார். இவர் விருது வாங்க வரும்போது அனைவரின் கவனமும் இவர் மீது தான் பாய்ந்தது. காரணம் மேலாடை இல்லாமல் வந்ததே... அதே வேளையில் அவருடைய மார்பு பகுதியில் "அவர்கள் எங்களை டார்ச்சர் செய்கிறார்கள்; பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விடுகிறார்கள்" என சிலி மொழியில் எழுதி இருந்தார்.

இதற்கு முன்னதாக கடந்த மாதம் அங்கு போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருந்தது. இதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கட்டுப்படுத்த போலீசார் முற்பட்டபோது 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை கண்டிக்கும் வகையிலேயே பாடகி இவ்வாறு மேலாடையின்றி சில கருத்தை வெளிப்படுத்தும் விதமாக இப்படி வசனம் எழுதிக் கொண்டு விருது வாங்க வந்தார். பின்னர் அந்த விருதை சிலி  மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்