சென்னையில் அங்கீகாரம் இல்லாமல் நடத்தும் ஹாஸ்டல்...! ஆப்பு வைத்த ஆட்சியர்...!

By ezhil mozhiFirst Published Jun 4, 2019, 7:33 PM IST
Highlights

சென்னையில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்த 227 விடுதிகள் மீது கிரிமினல் வழக்கு தொடர சென்னை ஆட்சியர் அதிரடி உத்தரவு  பிறப்பித்து உள்ளார். கடந்த  மார்ச் மாதம் வரை விண்ணப்பிக்க  கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் அங்கீகாரம் இல்லாமல் நடத்தும் ஹாஸ்டல்...! ஆப்பு வைத்த ஆட்சியர்...!

சென்னையில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்த 227 விடுதிகள் மீது கிரிமினல் வழக்கு தொடர சென்னை ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். கடந்த  மார்ச் மாதம் வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இந்த விடுதிகளில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத விடுதிகளில் குடிநீர் மற்றும் மின் விநியோகத்தை நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சிறப்பு தணிக்கையின்போது 227 விடுதிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருவது தெரியவந்துள்ளது.

பதிவு செய்யாதது குறித்து விசாரிக்க துணை ஆட்சியர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்தில் இதுவரை 7 விடுதிகள் மட்டுமே அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். இது தவிர, ஏற்கனவே விண்ணப்பித்து உள்ள தனியார் விடுதிகளின் நிலை என்ன என்பதை பற்றியும் இணையத்தளத்தில் பதிவிடபட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. 

சென்னையை பொறுத்தவரை, 11 தொகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் எதனை ஹாஸ்டல் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன? என்ற பாணியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வேளச்சேரி, மதுரவாயல், அமைந்தகரை என பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது என்பது கூடுதல். ஏற்கனவே அங்கீகாரம் பெற கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் ஏன் அங்கீகாரம் பெறவில்லை என்ற விளக்கமும் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டு உள்ளது. 

click me!