கண்கலங்க வைக்கும் வீடியோ..! வீட்டு பாடம் செய்ய சிறுவன் செய்யும் வேலையை பாருங்க...!

Published : Nov 18, 2019, 07:19 PM IST
கண்கலங்க வைக்கும் வீடியோ..! வீட்டு பாடம் செய்ய சிறுவன் செய்யும் வேலையை பாருங்க...!

சுருக்கம்

பிரேசிலில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் உள்ள கடையில் பள்ளி சிறுவன் ஒருவன் அங்கிருந்த டேப்லட்டை பயன்படுத்தி வீட்டுப்பாடம் செய்கிறான். 

கண்கலங்க வைக்கும் வீடியோ..! வீட்டு பாடம் செய்ய சிறுவன் செய்யும் வேலையை பாருங்க...!

தன் வீட்டில் இன்டர்நெட் கனெக்ஷன் இல்லை என்பதால் வீட்டு பாடத்தை முடிக்க மிகுந்த சிரமப்பட்டு சிறுவன் ஷாப்பிங் மாலில் உள்ள கடையில் அனுமதிபெற்று இன்டர்நெட் பயன்படுத்தி வீட்டு பாடத்தை முடிக்கும் ஓர் காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரேசிலில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் உள்ள கடையில் பள்ளி சிறுவன் ஒருவன் அங்கிருந்த டேப்லட்டை பயன்படுத்தி வீட்டுப்பாடம் செய்கிறான். கடைகாரரிடம் முறையான அனுமதி பெற்று தினமும் இவ்வாறு வீட்டுப்பாடம் செய்து முடித்தவுடன் வீட்டிற்கு செல்கிறான். சிறுவனின் நிலையை அறிந்து கடைக்காரரும் இதற்கு அனுமதி கொடுத்துள்ளார்.

 

இவ்வாறு சென்று கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் யாரோ ஒருவர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் சிறுவன் இந்த அளவிற்கு கஷ்டப்பட்டு எப்படியும் வீட்டுப் பாடம்  முடிக்க வேண்டும், படிக்க வேண்டும் என்ற ஆவலுடன் இருப்பதால் எப்படியும் மேன்மேலும் வாழ்க்கையில் உயர்வான் என்ற நம்பிக்கையில் கடைக்காரரும் அவருக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரையும் சமூக வலைத்தளத்தில் பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை முன்வைத்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Interesting Facts: அமெரிக்காவில் மக்கள் கேஸ் சிலிண்டர் வாங்குறதே இல்ல.! அவங்களுக்கு எப்படி சமையல் எரிவாயு கிடைக்குது தெரியுமா?
Toilet Cleaning: 10 நிமிடத்தில் பளீர் என மின்னும் டாய்லெட்.! மஞ்சள் கறை காணாமல் போகும் மேஜிக்.! உடனே ட்ரை பண்ணி பாருங்க.!