"புது பணக்காரி" என்ற பவுசு..! தொட்ட உடன் ஓவரா சிலுத்துக்கொண்ட ரயில்வே ஸ்டேஷன் பாடகி " ராணு மண்டால்"..!

Published : Nov 07, 2019, 05:10 PM ISTUpdated : Nov 07, 2019, 05:19 PM IST
"புது பணக்காரி" என்ற பவுசு..! தொட்ட உடன் ஓவரா சிலுத்துக்கொண்ட  ரயில்வே ஸ்டேஷன் பாடகி " ராணு மண்டால்"..!

சுருக்கம்

ஒரே இரவில் அனைவராலும் அறியப்பட்ட இவருடைய திறமையை பார்த்து அனைவரும் ஆதரவு தெரிவிக்கவே பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான ஹிமேஷ் ரெஷ்மியாஒரு வாய்ப்பை வழங்கினார்.

"புது பணக்காரி" என்ற பவுசு..! தொட்ட உடன் ஓவரா சிலுத்துக்கொண்ட ரயில்வே ஸ்டேஷன் பாடகி " ராணு மண்டால்"..!

எத்தனையோ பேருக்கு திறமை இருந்தும் அதனை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடுமா என்றால் கிடையாது. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு சமீபத்தில் கல்கத்தா ரயில்வே நிலையத்தில் பிச்சை எடுத்தவாறு பாட்டு பாடிய  ராணு மண்டாலுக்கு கிடைத்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.... 

இவர் பாடிய ஒரு பாடலை சகபயணிகள் ஒருவர் போகும் வழியில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட அனைவரும் அவருக்கு பாராட்டு மழை தெரிவித்து இருந்தனர்.பின்னர்  ஒரே இரவில் அனைவராலும் அறியப்பட்ட இவருடைய திறமையை பார்த்து அனைவரும் ஆதரவு தெரிவிக்கவே பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும்,பாடகருமான ஹிமேஷ் ரெஷ்மியா ஒரு வாய்ப்பை வழங்கினார்.

பின்னர்  சல்மான்கானும் இவருக்கு 50 லட்சத்தில் ஒரு வீடு வாங்கிக் கொடுத்ததாகவும் பேசப்பட்டது. இந்த ஒரு தருணத்தில் ஒரு கடையில் சில பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த பாடகி ராணு மண்டாலை பார்த்த ரசிகை ஒருவர் ஆர்வமாக அவர் அருகில் சென்று, அவர் கையை கையை தொட்டு தங்கள் உடன் ஒரு செல்பி எடுத்துக் கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறார்.

 

அதற்கு எப்படி என்னைத்தொட்டு நீங்கள் கேட்கலாம்? என்னை தொடக்கூடாது என கோபமாக தனது ரசிகையிடம் சத்தம் போடுகிறார். இந்த காட்சி அங்கு வைத்திருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. எந்த அளவிற்கு சமூக வலைதளத்தில் பாடகிக்கு ஆறுதல் கிடைத்ததோ... நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்ததோ... அதே சமூக வலைத்தளத்தில் இப்போது அவருடைய செயலுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவருக்கு வந்த வாழ்வு அப்படி? ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து இருந்தபோது எப்படி அவருடைய வாழ்க்கை இருந்தது என்பது தற்போது மறந்து போயிருக்கும் போல ..காசு பணம் பார்த்தவுடன் எவ்வளவு தலைக்கனம் இந்த பாடகிக்கு?.. என மனதில் தோன்றியவாறு வறுத்து எடுக்கின்றனர் நெட்டிசன்கள்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்