மதிய வேளை வெயிலில்.. வறுமையை போக்க ரோட்டோரம் நின்று கம்பு பணியாரம் விற்கும் "பள்ளி சிறுவன்".. குவியும் பாராட்டு..!

By ezhil mozhiFirst Published Feb 22, 2019, 3:20 PM IST
Highlights

எத்தனையோ குடும்பங்கள் வறுமையில் வாடினாலும் அவர்களுக்கு  நிம்மதியான வாழ்கை மட்டும் கண்டிப்பாக இருக்கும்.

மதிய வேளை வெயிலில்.. வறுமையை போக்க ரோட்டோரம் நின்று  கம்பு பணியாரம் விற்கும் "பள்ளி சிறுவன்".
 
எத்தனையோ குடும்பங்கள் வறுமையில் வாடினாலும் அவர்களுக்கு நிம்மதியான வாழ்கை மட்டும் கண்டிப்பாக இருக்கும். இருப்பதை உண்டு, தேவையான வற்றிற்கு மட்டும் செலவு செய்து, ஓவ்வொன்றிற்கும் பார்த்து பார்த்து திட்டமிட்டு செலவு செய்து வாழ்க்கையை நடத்துவார்கள் அல்லவா..?

அதிலும் படிக்கும் பிள்ளைகள் இருந்தால் கூடுதல் பணம் தேவைப்படும் அல்லவா..?அப்படி ஒரு பிள்ளை தான்,மதிய வேளையில்,சாலையோரத்தில்,கம்பு கூழ்,போலி, வல்லாரை சூப், தினை அரிசி பாயாசம்,கொண்டை கடலை சுண்டல், சுழியம், கம்பு பணியாரம்,பச்சை பயிறு,கொழுக்கட்டை என அனைத்தும் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கூடிய பணத்தை தன் குடும்பத்திற்கும் படிப்பு செலவிற்கும் பயன்படுத்தி வருகிறான். 

இதே போன்று சில மாதங்களுக்கு முன்பாக ஹெனன் என்ற கல்லூரி மாணவி மாலை நேரத்தில் மீன் விற்பனை செய்து அதில் கிடைக்க கூடிய பணத்தில் தன் குடும்பத்தின் வறுமையை சாதுர்த்தியமாக சமாளித்து வந்தார். அது பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. அதே போன்ற ஒரு நிகழ்வு..தற்போது இந்த சிறுவனும் சாலையோரத்தில் கடை நடத்தி வருகிறான்.இந்த சிறுவனுக்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளது 

"

tags
click me!