கள்ளகாதலியுடன் ஓடி போன புரோகிதர்..! உடன் தாலி கட்டிய மனைவி, குழந்தைகளையும் அழைத்து சென்ற வினோதம்..!

Published : May 28, 2019, 06:47 PM IST
கள்ளகாதலியுடன் ஓடி போன புரோகிதர்..! உடன் தாலி கட்டிய  மனைவி,  குழந்தைகளையும் அழைத்து  சென்ற வினோதம்..!

சுருக்கம்

தனக்கு திருமணம் செய்து வைத்த புரோகிதருடன் ஓடி சென்ற மணப்பெண்ணால் திருமண மண்டபத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.  

கள்ளகாதலியுடன் ஓடி போன புரோகிதர்..!

தனக்கு திருமணம் செய்து வைத்த புரோகிதருடன் ஓடி சென்ற  மணப்பெண்ணால் திருமண மண்டபத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ளது ஆசாத் என்ற கிராமம். இங்கு வசித்து வந்தவர் வினோத் மகராஜ்.இவர் திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதர் வேலையை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் 7 ஆம் தேதியன்று டோரி பாக்ரோடு என்ற கிராமத்தில் திருமணம் ஒன்றை நடத்தி வைத்துள்ளார்.பின்னர் கடந்த 23ஆம் தேதி வேறு ஒரு திருமணத்தை நடத்த ஏற்பாடும் செய்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி தேதியன்று, வினோத் அந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. மேலும் திருமண நேரம் நெருங்கும் சமயத்தில் வினோத் அந்த இடத்தில் இல்லாததால் பெண்வீட்டார் அவரை தீவிரமாக தேடி உள்ளனர். அப்போதுதான் தெரியவந்துள்ளது அன்றைய தினத்தில் இதற்கு முன்னதாக 7ஆம் தேதி திருமணம் செய்து வைத்த அந்த பெண்ணுடன் ஓட்டம் பிடித்துள்ளார். மேலும் 7 ஆம் தேதி திருமணம் ஆகி அதற்கு அடுத்த மூன்று நாட்களிலேயே அந்த பெண் மாப்பிள்ளை வீட்டில் இருந்து திரும்பியதும் தெரியவந்துள்ளது

வினோத் உடன் சென்ற அந்தப் பெண் போகும்போது ஒன்றரை லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்து சென்றுள்ளார். இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் வினோத்திற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்பதும் ஓடிப்போன அந்தப் பெண்ணிற்கும் வினோத்திற்கும் இதற்கு முன்னதாகவே இரண்டு ஆண்டுகாலம் பழக்கம் இருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மேலும் இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்ன வென்றால், ஓடிப்போன வினோத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கள்ளக்காதலியும் அழைத்து ஊரை விட்டு சென்று விட்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் அனைவரும் வியப்பில் ஆழ்ந்து உள்ளனர்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்