அப்போ.. திருத்தணியில் 114 டிகிரி வெப்பமா..? இப்பவே கண்ண கட்டுது...இன்னும் 6 டிகிரி உயருமாம்..!

By ezhil mozhiFirst Published May 28, 2019, 4:54 PM IST
Highlights

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிக அளவு காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

அப்போ.. திருத்தணியில் 114 டிகிரி வெப்பமா..? இப்பவே கண்ண கட்டுது...இன்னும் 6 டிகிரி உயருமாம்..!  

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிக அளவு காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இயல்பை விட குறைந்தது 6 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மதுரை, தேனி, திருச்சி, வேலூர், உள்ளிட்ட பகுதிகளில் 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. அதிகபட்சமாக திருத்தனியில் 133 டிகிரி வெப்பநிலை உயர்ந்தது. இந்த வெயிலை சமாளிக்கவே மக்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் மேலும் 6 டிகிரி உயரும் எனக் கூறப்பட்டுள்ளது.  சராசரியாக 110 டிகிரி கொளுத்தி எடுத்து வரும் நிலையில், மேலும் உயர்ந்தால் அது 116 டிகிரியாக உயரும். இதனால் மக்கள் பெருந்துயரங்களை சந்திக்கும் நிலை ஏற்படலாம்.  

மேலும்  வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அதே நேரத்தில் தமிழக மாவட்டங்களான மதுரை சேலம் நாமக்கல் கோவை திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் திண்டுக்கல் தேனி விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று அதிகமாக வீசும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பயணம் செய்யும்போது கூட உடன் குடை மற்றும் வாட்டர் பாட்டில் வைத்திருப்பது மிகவும்  நல்லது.

நாளையுடன் கத்திரி வெயில் முடிவடையும் தருவாயில், தற்போது நிலவும் வெயிலை விட சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்  

click me!