தயவு செய்து யாரும் சொந்த ஊருக்கு போகாதீங்க...! விவரமறிந்தவரின் "கதறல்"..!

thenmozhi g   | Asianet News
Published : Mar 23, 2020, 02:26 PM IST
தயவு செய்து யாரும் சொந்த ஊருக்கு போகாதீங்க...! விவரமறிந்தவரின் "கதறல்"..!

சுருக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெரும் துயரத்தில் இருந்து மீண்ட சீனா மற்றும் தற்போது   படு மோசமாக இருக்கக்கூடிய இத்தாலி, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த ஒருவர், இந்தியாவில் அப்படி ஒரு நிலைமையை வரமால் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு  கருத்தை பதிவு செய்து உள்ளார். 

தயவு செய்து யாரும் சொந்த ஊருக்கு போகாதீங்க...! விவரமறிந்தவரின் "கதறல்"..! 

கொரோனா பாதிப்பு குறித்து தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் எவ்வளவு தான் விழுப்புணர்வு ஏற்படுத்தினாலும், மக்கள் வெளியில் நடமாடிக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.    

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெரும் துயரத்தில் இருந்து மீண்ட சீனா மற்றும் தற்போது   படு மோசமாக இருக்கக்கூடிய இத்தாலி, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த ஒருவர், இந்தியாவில் அப்படி ஒரு நிலைமையை வரமால் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு  கருத்தை பதிவு செய்து உள்ளார். அதில்,                            

"நீங்க எங்க இருக்கீங்களோ அங்கேயே உங்களை தனிமைபடுத்தி கொள்ள முயலுங்கள்...

நகரங்களிலாவது கொரோனாவுக்கு என தனி ஏற்பாடுகள் மருத்துவமனைகளில் உள்ளன...

இத்தாலியில் இப்படி சொந்த ஊருக்கு இடம் பெயர்ந்த வெறும் 10000 நபர்களால் தான் இன்று தினசரி 1000 இறப்புகள் தொடர்கதையாக உள்ளதாக தகவல்கள் வருகின்றன... 

கிராமங்களுக்கு போய் உங்களால் மற்றவருக்கும் உங்கள் வளர்ப்பு பிராணிகளுக்கும் தொற்று ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம்...

உங்களுக்கு #கொரோன பாதித்த எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அது உடனே தெரியாது... 

பல நாட்கள் ஆகலாம் ஏன் சிலருக்கு அறிகுறிகள் வெளிபடாமலேயே தானே கூட குணமாகலாம்...

ஒத்துழையுங்கள் அரசுக்கு... உணவுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கள்... தயவு செய்து பிரயானங்களை தவிருங்கள்..." நன்றி என குறிப்பிட்டு உள்ளார். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்