ஆங்கிலத்தில் சரமாரியாக பேசிய கூலி தொழிலாளி..! இந்தியில் பேசி எப்படியோ சமாளித்த ரிப்போர்ட்டர்..! வைரலாகும் அசத்தல் வீடியோ...!

By ezhil mozhiFirst Published Apr 10, 2019, 6:12 PM IST
Highlights

வரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த தருணத்தில் அடுத்த பிரதமராக தேர்வாக போவது யார் என்ற கேள்விகளுடன் மக்கள் கருத்துக் கணிப்பில் ஊடகங்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். 
 

வரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த தருணத்தில் அடுத்த பிரதமராக தேர்வாக போவது யார் என்ற கேள்விகளுடன் மக்கள் கருத்துக் கணிப்பில் ஊடகங்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். 

இது ஒரு பக்கம் இருக்க.. பிரபல தனியார் தொலைக்காட்சி மக்கள் மத்தியில் நடத்திய கருத்து கணிப்பின் போது கூலி தொழிலாளி ஒருவர் ஆங்கிலத்தில் பேசி அசத்திய சுவாரசியமான சம்பவம் நடந்து உள்ளது.அடுத்து யார் பிரதமராக வரக்கூடிய வாய்ப்பு உள்ளது?  தற்போது உள்ள வேலை வாய்ப்பு  பற்றி உங்கள் கருத்து என்ன? என கூலி தொழிலாளி ஒருவரிடம் செய்தியாளர் இந்தியில் கேள்வி கேட்க கூலி தொழிலாளி ஆங்கிலத்தில் சரளமாக விளக்கமளித்தார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி பற்றியும் இந்திராகாந்தி இருந்தபோது இருந்த ஆட்சி பற்றியும், அப்போது இருந்த வேலைவாய்ப்பு பற்றியும் இப்போது உள்ள வேலைவாய்ப்பு  பற்றியும் ஆங்கிலத்தில் தெரிவித்திருந்தார். இவருடைய ஆங்கில புலமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் செய்தியாளர், இந்தியில் பேசி சமாளிக்கும் வீடியோவை பார்க்க முடிகிறது.

மீண்டும் மீண்டும் செய்தியாளர் இந்தியிலேயே கேள்வி கேட்க அதற்கும் சரமாரியாக பதில் கொடுக்கிறார் கூலித்தொழிலாளி. இந்தி மொழியாக இருந்தாலும் சரி இங்கிலீஷ் ஆக இருந்தாலும் சரி பட்டையை கிளப்புகிறார் இந்த கூலி தொழிலாளி.ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவரான இவர், பகல்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்ததாக அவரே தெரிவித்து உள்ளார்

https://www.youtube.com/watch?v=_J9xujBI20s&feature=youtu.be

இவர் பேட்டி அளிக்கும் போது உடன் இருந்தவர்கள் இவருடைய பேச்சை கேட்டு சிரித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதேவேளையில் கடைசிவரையிலும் அந்த செய்தியாளர் இந்தியில் மட்டுமே கேள்வி கேட்டிருந்தார். ஆனால் கூலி தொழிலாளி ஆங்கிலம் ஹிந்தி என சரளமாக இரு மொழியிலும் பேசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பார்க்கும் மக்கள் இவருடைய பேச்சை கேட்டு ரசித்து வருகின்றனர்.

click me!