
ஒரே பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகள்..!
ஈராக்கை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தை பிராந்துள்ள அதிசயம் நடந்துள்ளது. இதற்கு முன்னதாக 1997ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக உலகிலேயே 2 ஆவது முறையாக தற்போது ஈராக்கில் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.
கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட 25 வயதுடைய ஒரு பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தை பிறந்துள்ளது. 6 ஆண் குழந்தைகளும்,1 பெண் குழந்தையும் பிறந்துள்ளது. 7 குழந்தைகளும் நலமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த பெண்ணிற்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.